அம்மன் கோவில் கிழக்காலே
அம்மன் கோயில் கிழக்காலே (Amman Kovil Kizhakale) என்பது 1986ஆம் ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சுந்தர்ராஜன் இயக்கிய இப்படத்தில் விஜயகாந்த், ராதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1] இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இத்திரைப்படத்தின் பெயரானது 1982ஆம் ஆண்டில் வெளியான சகலகலா வல்லவன் படத்தில் வரும் அம்மன் கோயில் கிழக்காலே எனும் பாடல் வரியிலிருந்து எடுத்து வைக்கப்பட்டதாகும்.[2] நடிகர்கள்
வெளியீடு1986 ஆவது ஆண்டில் வெளியான இத்திரைப்படம் வணிக ரீதியாக சிறப்பான வெற்றி பெற்ற திரைப்படமாகும். தமிழகத்தின் பல்வேறு திரையரங்குகளில் 150 நாட்களைத் கடந்தும், 20 திரையரங்குகளில் 200 நாட்களைக் கடந்தும் வெற்றிகரமாக ஓடியது. பாடல்கள்இது இளையராஜாவின் இசையமைப்பில் வெளியான திரைப்படமாகும்.[3] அனைத்து பாடல்களும் சிறப்பான வரவேற்பு பெற்ற பாடல்களாகும்.
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia