ராஜாதி ராஜா (1989 திரைப்படம்)
ராஜாதி ராஜா 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ரஜினிகாந்த் நடித்த இப்படத்தை ஆர். சுந்தர்ராஜன் இயக்கினார்.[1] 1989 மார்ச் மாதம் வெளியிடப்பட்ட இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா. இந்த படம் மிகப் பெரிய வெற்றி பெற்று 175 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. வகைநடிகர்கள்
கதைகதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன. வெளிநாட்டில் இருந்து எஸ்டேட் திரும்பும் ராஜா, தனது தந்தையின் மரணம் பற்றி அறிந்து அதிர்ச்சி ஆகிறார். தனது நண்பனை தனக்குப் பதிலாக எஸ்டேட்க்கு அனுப்பி வைக்கிறார். இதை அறிந்த சதிகாரர்கள், அந்த நண்பனைக் கொன்று பழியை ராஜா மீது போடுகிறார்கள். சிறை செல்லும் ராஜா, உண்மையைக் கண்டுபிடிக்க அங்கிருந்து தப்புகிறார். வழியில் தன்னைப் போல் உருவ ஒற்றுமை கொண்ட மற்றொரு அப்பாவி மனிதனைக் காண்கிறார். தான் உண்மையான சதிகாரர்களைக் கண்டறியும் வரை , தனக்கு மாற்றாக சிறையில் இருக்குமாறு கேட்கிறார். பணத்தேவை கொண்ட அந்த அப்பாவியும் ஒப்புக் கொண்டு சிறை செல்கிறார். ராஜா உண்மையைக் கண்டறிந்தாரா , சதிகாரர்கள் சிறை சென்றார்களா என்று கதை செல்கிறது. பாடல்கள்இது இளையராஜாவின் இசையமைப்பில் வெளியான திரைப்படமாகும்.[2]
வெளியீடுமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia