அம்மன் (தொலைக்காட்சித் தொடர்)
அம்மன் என்பது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் 27 ஜனவரி 2020 முதல் 1 சூலை 2022 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான பக்தி திகில் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1][2] இந்த தொடரை ஐ. அஹ்மத் என்பவர் தயாரிக்க, ரவி பிரியன் என்பவர் இயக்கியுள்ளார். சக்தி என்ற கதாபாத்திரத்தில் புதுமுக நடிகை பவித்ரா நடிக்க இவருக்கு ஜோடியாக ஈஸ்வர் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் அமல்ஜித் என்பவர் நடித்துள்ளார்.[3][4][5][6][7][8][9][10] தெய்வ சக்தி மூலம் வாக்கு சொல்லும் சக்தி என்ற பெண்ணும், தெய்வ வாக்கை நம்பாத ஊருக்கு புதிதாக வரும் வைத்தியர் இருவரையும் சேர்ந்து வைக்க விதி செய்யும் சதி என்ன என்பது தான் கதை. இந்த தொடர் 27 சனவரி 2020 ஆம் ஆண்டு முதல் மூன்று பருவங்களாக ஒளிபரப்பாகி, 1150 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.[11] பருவங்கள்
கதை சுருக்கம்அம்மன் தொடரின் கதை இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளைக் கொண்ட ஒரு சிறிய நகரப் பெண்ணான சக்தியைச் சுற்றி கதை நகர்கின்றது. எதிர்காலத்தை முன்னறிவிக்கும் அம்மன் அருள் கொண்டு சக்தி என்ற இளம் பெண். இவளின் தனித்துவமான திறமையால் அந்த கிராமமே அம்மனின் அவதாரம் என போற்றி வணங்கி வருகின்றனர். அதே ஊரில் மருத்துவராக இருக்கும் ஈஸ்வர் கிராம மக்களின் மூட நம்பிக்கையை நம்பாத இவன் சக்தி போலித்தனத்தை வெளிக்காட்ட முயற்சிக்கும் தருணத்தின் இருவரும் விதியின் சதியால் காதலிக்கின்றனர். இவர்களின் காதலுக்கு ஊரும் உறவும் ஏற்குமா? இல்லை எதிர்க்குமா? என்பது தான் கதை. நடிகர்கள்முதன்மை கதாபாத்திரம்
துணை கதாபாத்திரம்
நேரம் மாற்றம்இந்த தொடர் முதலில் 27 ஜனவரி 2020 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:00 ஒளிபரப்பாகி, மே 28 2020 முதல் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி, பின்னர் செப்டம்பர் 4 முதல் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. மகாசங்கமம்
சர்வதேச ஒளிபரப்பு
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia