மாங்கல்ய தோஷம் அல்லது மாங்கல்ய சந்தோஷம் என்பது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் 23 மார்ச்சு 2020 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் திகில் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.
இந்த தொடரில் மலர் தொடரில் நடித்த 'அருண்' என்பவர் 'தருண்' என்ற கதாபாத்திரத்தில் நடிக்க இவருக்கு ஜோடியாக தாரா மற்றும் நித்தியா என்ற கதாபாத்திரத்தில் புதுமுக நடிகை 'லட்சுமி பிரியா'[1] என்பவர் நடிக்கின்றார்.
கதை சுருக்கம்
இந்த தொடரின் கதை ஒரு பக்கம் காதல் மறுபக்கம் துர் ஆத்மா இதற்க்கு நடுவில் சிக்கிய நித்யாவின் வாழ்க்கை என்ன ஆகும் என்பதுதான் கதை.
இந்த தொடர் மார்ச்சு 23, 2020 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி கொரோனாவைரசு காரணத்தால் மார்ச் 21, 2020 முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மே 28, 2020 அதே நேரத்தில் ஒளிபரப்பாகி, 26 அக்டோபர் 2020 முதல் புதிய நேரத்தில் திங்கள் முதல் சனி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி, 4 நவம்பர் 2020 முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
மகாசங்கமம்
இந்த தொடர் 15 மார்ச்சு முதல் 27 மார்ச்சு 2021ஆம் ஆண்டு அம்மன் என்ற தொடருடன் மகாசங்கமத்தில் ஒளிபரப்பானது. அதை தொடர்ந்து இரண்டாம் தடவையாக 10 மே 2021 முதல் ஒளிபரப்பாகின்றது.
மொழி மாற்றம்
இந்த தொடர் 'கலர்ஸ் ஓடியா' என்ற தொலைக்காட்சியில் 'ஓத்திருசாயி' என்று ஒடியா மொழியில் பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பானது.