அருணாசல புராணம்

அருணாசல புராணம் (அருணன்+அசலம்+புராணம்) என்னும் நூல் எல்லப்ப நாவலர் என்பவரால் பாடப்பட்டது.

  • இந்த நூலின் காலம் பொ.ஊ. 16-ஆம் நூற்றாண்டு.
  • சோழநாட்டுச் சைவ வேளாளர் இல்லங்களில் பெரிதும் போற்றப்படும் நூல்கள்
அருணாசல புராணம்
பெரிய புராணம்
திருவிளையாடல் புராணம்
பிரமோத்தர காண்டம்

‘அண்ணல் மலை’யாகிய திருவண்ணாமலையை அருணன் அசலம் எனக் கொண்டு பிற்காலத்தில் வடமொழியாளர் பெயர் சூட்டினர்.
அண்ணாமலை அண்ணலாகிய சிவபெருமானின் புகழைப் போற்றுவது இந்த நூல்.
இஃது இரண்டு பாகங்களாக அமைந்துள்ளது.

முதல் பாகத்தை வடமொழிச் சிவபுராணத்திலுள்ள ‘ருத்திர சங்கிதை’யிலிருந்தும்,
இரண்டாம் பாகத்தை ‘லிங்க புராண’த்திலிருந்தும் கருத்துகளை எடுத்துக்கொண்டு பாடியதாகப் புலவரே தம்பாடலில் குறிப்பிடுகிறார்.

பாயிரம் நீங்கலாக ஒவ்வொன்றிலும் ஆறு சருக்கங்கள் உள்ளன.

451 பாடல்கள்

  1. திருநகர்ச் சருக்கம்
  2. திருமலைச் சருக்கம்
  3. திரு அவதாரச் சருக்கம்
  4. திருக்கண் புதைத்த சருக்கம்
  5. பார்வதி இடப்பாகம் பெற்ற சருக்கம்
  6. வச்சிராங்கத பாண்டியச் சருக்கம்

137 பாடல்கள்

  1. தீர்த்தச் சருக்கம்
  2. திருமலை வலம்புரிச் சருக்கம்
  3. ஆதித்தச் சருக்கம்
  4. பிரதத்தராசன் சருக்கம்
  5. பாவம் தீர்த்த சருக்கம்
  6. புளகாதிபச் சருக்கம்
  • இதே நூற்றாண்டில் இதே அண்ணாமலையைப் பற்றி அருணகிரிப் புராணம் என்னும் நூல் மறைஞான சம்பந்தர் என்பவரால் இயற்றப்பட்டுள்ளது.

வேறு பதிப்பு மூலமும் கதைகளும்

இந்த நூல் பாயிரம், மற்றும் 14 சருக்கங்கள் கொண்ட நிலையில் வேறொரு பதிப்பு உள்ளது.[1]

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 1, 2005

அடிக்குறிப்பு

  1. நா. கதிரைவேல் பிள்ளை பதிப்பு, வித்தியாதர அச்சகம் 1927
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya