அருள்மிகு பழனியாண்டவர் அரசு மகளிர் கலைக் கல்லூரி

அருள்மிகு பழனியாண்டவர் அரசு மகளிர் கலைக் கல்லூரி
உருவாக்கம்1970
சார்புதன்னாட்சி
மதச் சார்பு
பழனி முருகன் கோவில்
முதல்வர்என். புவனேஸ்வரி
அமைவிடம்
இணையதளம்www.apacwomen.ac.in

அருள்மிகு பழனியாண்டவர் அரசு மகளிர் கலைக் கல்லூரி (ஆங்கிலம்:Arulmigu Palaniandavar Arts College for Women) என்பது திண்டுக்கல் சின்னக்கலையம்புத்தூரில் உள்ள தமிழக அரசின் மகளிர் கலைக் கல்லூரியாகும். இது இந்து சமய அறநிலையத் துறையின் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் மூலம் 1970 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தன்னாட்சி பெற்ற கல்லூரியாகும்.[1] என்ஏஏசி தரமதிப்பீட்டில் பி++ பெற்றுள்ளது.[2] தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஆட்சிக்குழுவின் தலைவராகவும், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் இணை ஆணையர்/ செயல் அலுலவர் கல்லூரியின் தாளாளராகவும் துணை ஆணையர் இக்கல்லூரியில் செயலராகவும் உள்ளனர்.[3]

துறைகள்

இக்கல்லூரியில் தமிழ்த் துறை, ஆங்கிலத் துறை, வரலாற்றுத் துறை, பொருளாதாரத் துறை, வணிகவியல் துறை, கணிதத் துறை, இயற்பியல் துறை, வேதியியல் துறை, தாவரவியல் துறை, விலங்கியல் துறை, கணினித் துறை ஆகிய துறைகள் உள்ளன. இதன் மூலம் மொத்தம் 13 இளநிலைப் பாடவகுப்புகளும் 7 முதுநிலை வகுப்புகளும் 4 இளநிலை ஆய்வுகளும் நடைபெறுகின்றன.

மேற்கோள்கள்

  1. "பழனி கோயில் நிர்வாகத்தின் பள்ளி, கல்லூரிகளில் காலைச் சிற்றுண்டி திட்டம் தொடக்கம்". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2022/nov/16/palani-temple-administration-starts-breakfast-program-in-schools-and-colleges-3950363.html. பார்த்த நாள்: 2 November 2023. 
  2. "Contact". அருள்மிகு பழனியாண்டவர் அரசு மகளிர் கலைக் கல்லூரி. Retrieved 2 நவம்பர் 2023.
  3. "நிர்வாகக் குழு". apacwomen.ac.in. Retrieved 2 November 2023.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya