அல்லூரி சீதாராம இராஜு
அல்லூரி சீதாராம இராஜு (Alluri Sitarama Raju) (பிறப்பு: 1897-98 - இறப்பு:1924 மே 7) இவர் இந்திய சுதந்திர இயக்கத்தில் ஈடுபட்ட ஒரு இந்திய புரட்சியாளராவார். 1882 மெட்ராஸ் வனச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர், பதேரு காட்டில் பழங்குடியினரின் சுதந்திரமான நடமாட்டத்திற்கான அதன் கட்டுப்பாடுகள், அவர்களின் பாரம்பரிய போடு விவசாய முறைமையில் ஈடுபடுவதைத் தடுத்தன. இது சாகுபடியை மாற்றியது . 1922-24ல் ராம்பா கிளர்ச்சிக்கு இராஜு தலைமை தாங்கினார். அப்போது, ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மற்றும் விசாகப்பட்டினம் பிராந்தியங்களின் எல்லைப் பகுதிகளில், இன்றைய ஆந்திரப் பிரதேசத்தில், பிரித்தானிய இராச்சியத்திற்கு எதிராக, பழங்குடி மக்கள் மற்றும் பிற அனுதாபிகள் கொண்ட ஒரு குழு போராடியது. மேலும் ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்றியது. இதனால் இவரை உள்ளூர் மக்கள் "மான்யம் வீருடு" ("காடுகளின் நாயகன்") என்று அழைத்தனர். முந்தைய ஒத்துழையாமை இயக்கத்தின் அவசியத்தைக் கூறி பழங்குடி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திய இராஜு, சிந்தப்பல்லி, ரம்பச்சோதவரம், தம்மனப்பள்ளி, கிருட்டிணா தேவி பேட்டை, ராஜவோம்மங்கி, அடடீகலா, நர்சிப்பட்டிணம் மற்றும் அன்னவரம் ஆகிய இடங்களில் உள்ள காவல் நிலையங்களில் தாக்குதல் நடத்தினார். துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளைத் கைப்பற்றி, தம்மனப்பள்ளி அருகே இரண்டு பிரித்தன் காவல் அதிகாரிகளை கொன்றார். இராஜு இறுதியில் சிந்தப்பல்லி காடுகளில் ஆங்கிலேயர்களிடம் சிக்கி, பின்னர் ஒரு மரத்தில் கட்டப்பட்டு, கொய்யூரு கிராமத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது கல்லறை கிருட்டிணா தேவி பேட்டை கிராமத்தில் இன்றும் உள்ளது. வாழ்க்கைஅல்லூரி சீதாராம இராஜுவின் ஆரம்பகால வாழ்க்கையின் விவரங்கள் வேறுபடுகின்றன. விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பீமுனிபட்டணத்தில் இவர் பிறந்தார் என்று ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது.[1] பீமிலிபட்டணம் சட்டமன்ற சட்டமன்றத் தொகுதியில் அமைந்துள்ள பாண்டரங்கி கிராமத்தை இவரது துல்லியமான பிறந்த இடமாக பெயரிடும் சமீபத்திய செய்திகளும் வந்துள்ளன. [2] இவர் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள மொகல்லு என்ற ஒரு கிராமத்தில் பிறந்தார் எனவும் பல வட்டாரங்கள் கூறுகின்றன. [3] [4] [5] இவரது பிறந்த தேதியும் சர்ச்சைக்குரியது. பல ஆதாரங்கள் இதை 1897 சூலை 4 என்றும் [6] [7] [8] ஆனால் மற்றவர்கள் இவர் 1898 இல் பிறந்ததாகவும் கூறுகின்றனர் [1] மேலும், குறிப்பாக இவர் பிறந்த தேதி 4 ஜூலை 1898 என்பதாகும். [9] இராஜுவின் பெற்றோர் வெங்கடராம இராஜு மற்றும் சூரியநாராயணம்மா. [10] இவர்கள் சத்திரிய வர்ணத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். சமகால அறிக்கைகள் இவர் ஒரு தனித்துவமான கல்வியைக் கொண்டிருந்தன. ஆனால் 18 வயதில் சன்யாசியாக மாறுவதற்கு முன்பு ஜோதிடம், மூலிகை, கைரேகை மற்றும் குதிரை சவாரி ஆகியவற்றில் ஒரு குறிப்பிட்ட அக்கறை காட்டினார். இவர் பின்னர் கோதாவரி பகுதியைச் சுற்றித் திரிந்தபோது, இந்த திறமைகளும் இவரது கவர்ச்சியான தன்மையும் பழங்குடி மக்களிடையே இவருக்கு மாயாஜால சக்திகள் மற்றும் புனித அந்தஸ்து உடையவர் என்ற புகழைப் பெற்றன. [4] இராஜு இறுதியில் சிந்தப்பல்லி காடுகளில் ஆங்கிலேயர்களிடம் சிக்கினார். கொய்யூரு கிராமத்தில் ஒரு மரத்தில் கட்டப்பட்டு துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். [11] இவரது கல்லறை கிருஷ்ணா தேவி பேட்டை கிராமத்தில் உள்ளது. [12] குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia