விசாகப்பட்டினம் மாவட்டம்
விசாகப்பட்டினம் மாவட்டம் இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள 26 மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் விசாகப்பட்டினம் நகரில் உள்ளது. 1,048 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில், 2001-ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி 5,832,336 மக்கள் வாழ்கிறார்கள். இந்த மாவட்டம் ஆந்திரப் பிரதேசத்தின் ஒன்பது கடலோர மாவட்டங்களில் ஒன்றாகும். விசாகப்பட்டின மாவட்டம் வடக்கில் ஒடிசாவினாலும், கிழக்கில் விசயநகர மாவட்டம், தென்மேற்கில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தினாலும், தெற்கே வங்காள விரிகுடாவினாலும் சூழப்பட்டுள்ளது.[1] மாவட்டம் பிரிப்புஇம்மாவட்டத்தின் சில வருவாய் கோட்டங்களைக் கொண்டு 4 ஏப்ரல் 2022 அன்று புதிய அனகாபள்ளி மாவட்டம் மற்றும் அல்லூரி சீதாராம இராஜு மாவட்டம் நிறுவப்பட்டது.[2][3] வரலாறுஇந்தியாவில் பிரித்தானிய ஆட்சியின் போது விசாகப்பட்டினம் ஒரு மாவட்டமாக உருவெடுத்தது. 1936 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி பீகார் மற்றும் ஒரிசா மாகாணம் பிரிக்கப்பட்டு பீகார் மாகாணம் மற்றும் ஒரிசா மாகாணம் அமைக்கப்பட்டது . விசாகப்பட்டின மாவட்டத்தின் பகுதிகளான நபரங்பூர், மல்கங்கிரி , கோராபுட், ஜெய்பூர், ராயகடா ஆகியவையும், மற்றும் சென்னை மாகாணத்தின் கஞ்சம் மாவட்டத்தின் இச்சாபுரம் , பாலாசா , தெக்காலி , பதப்பட்டினம் மற்றும் ஸ்ரீகாகுளம் தவிர்ந்த ஏனைய பகுதிகளும் ஒரிசா மாகாணத்திற்கு மாற்றப்பட்டது.[4] 1950 ஆம் ஆண்டில் சிறீகாகுளம் மாவட்டம் முந்தைய விசாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து செதுக்கப்பட்டது. 1979 ஆம் ஆண்டில் விசயநகர மாவட்டத்தை உருவாக்க மாவட்டத்தின் ஒரு பகுதி பிரிக்கப்பட்டது.[5] விசாகப்பட்டினம் மாவட்டம் தற்போது சிவப்பு தாழ்வாரத்தின் ஒரு பகுதியாகும்.[6] புவியியல்விசாகப்பட்டினம் மாவட்டம் சுமார் 1048 சதுர கிலோமீற்றர் (4,309 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது.[7] பரப்பளவில் இந்த மாவட்டம் கனடாவின் கேப் பிரெட்டன் தீவுக்கு ஒப்பீட்டளவில் சமம் ஆகும்.[8] புள்ளிவிபரங்கள்2011 ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பின்படி விசாகப்பட்டினம் மாவட்டத்தின் 4,290,589 வசிக்கின்றனர்.[9] இது இந்தியாவில் 640 மாவட்டங்களில் 44 வது இடத்தையும், ஆந்திர மாநிலத்தில்) 4 வது இடத்தையும் பெறுகின்றது. மாவட்டத்தில் சதுர கிலோமீற்றருக்கு (990 / சதுர மைல்) 384 மக்கள் அடர்த்தி உள்ளது. 2001–2011 காலப்பகுதியில் மாவட்டத்தின் சனத்தொகை வளர்ச்சி விகிதம் 11.89% ஆகும். விசாகப்பட்டின மாவட்டம் ஒவ்வொரு 1000 ஆண்களுக்கும் 1003 பெண்கள் என்ற பாலின விகிதத்தை கொண்டுள்ளது. மக்களின் கல்வியறிவு விகிதம் 67.7% ஆகும்.[9] பொருளாதாரம்மாவட்டத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ( ஜி.டி.டி.பி ) 73,276 கோடி (அமெரிக்க $ 11 பில்லியன்) ஆகும். இது மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.எஸ்.டி.பி) 14% வீத பங்களிக்கிறது. விவசாயத்தில் கரும்பு, நெல், வெற்றிலை, மா, பால், இறைச்சி மற்றும் மீன்வளம் என்பனவும், தொழில்துறை மற்றும் சேவைத் துறையில் கட்டுமானம், சிறு கனிமங்கள், மென்பொருள் சேவைகள் மற்றும் அமைப்புசாரா வர்த்தகங்கள் ஆகியவையும் பொருளாதாரத்தில் பங்கு வகிக்கின்றன.[10] கல்விஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளி கல்வி மாநில, உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளால், மாநில பள்ளி கல்வித் துறையின் கீழ் வழங்கப்படுகிறது. மாவட்டத்தின் தொடக்க, மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 609,587 ஆகும்.[11] பௌத்த தொல்லியல் களங்கள்இம்மாவட்டத்தின் தலைமையிடமான விசாகப்பட்டினம் நகரத்திற்கு அருகில் உள்ள மலைக் குன்றுகளில் கிமு இரண்டாம் நூற்றாண்டின் பௌத்த நினைவுச் சின்னங்கள் கொண்ட பவிகொண்டா, தொட்டலகொண்டா, போஜ்ஜன்ன கொண்டா வளாகங்கள் உள்ளது. தட்பவெப்ப நிலை
ஆட்சிப் பிரிவுகள்மாவட்டத்தில் அனகபள்ளி, படேரு, நரசிபட்னம் மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய நான்கு வருவாய் பிரிவுகளும் துணை ஆட்சியரின் தலைமையில் அமைந்துள்ளன. இந்த வருவாய் பிரிவுகள் மாவட்டத்தில் 46 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டத்தில் 3265 கிராமங்கள் மற்றும் 15 நகரங்கள் காணப்படுகின்றன. விசாகப்பட்டினம் பிரிவில் 13 மண்டலங்களும், நர்சிபட்டினம், அனகபள்ளி மற்றும் படேரு பிரிவுகளில் தலா 11 மண்டலங்களும் உள்ளன.[13] இந்த மாவட்டத்தில் அனகாபல்லி, விசாகப்பட்டினம், அரக்கு ஆகிய மூன்று பாராளுமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்த மாவட்டத்தில் கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[14] அவை:
இந்த மாவட்டத்தில் 43 மண்டலங்கள் உள்ளன.[15][16].
வழிபாட்டுத்தலங்கள்எண்டோவ்மென்ட்ஸ் துறையின் நிர்வாகத்தின் கீழ் முப்பத்தாறு கோயில்கள் உள்ளன.[17] போக்குவரத்துமாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலைகளின் மொத்த சாலை நீளம் 964 கி.மீ. (599 மைல்) ஆகும்.[18] இவற்றையும் பார்க்கவும்வெளியிணைப்புக்கள்
சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia