அவளும் பெண்தானே
அவளும் பெண் தானே 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், சுமித்ரா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இது விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது. வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.[1][2] நடிப்பு
தயாரிப்புஅவளும் பெண் தானே படத்தை அறிமுக இயக்குநர் துரை திரைக்கதை எழுதி, இயக்கினார்.[1] இப்படத்தை ஸ்ரீ பாண்டுரங்கா புரொடகசன்ஸ் என்ற பதாகையின் கீழ், பண்டரிபாய் தயாரித்தார். மேலும் இப்படத்தில் ஆர். முத்துராமன் பாத்திரத்தக்கு தாயாகவும் அவர் நடித்தார். இந்தப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான சுமித்ரா பாலியல் தொழிலாளி பாத்திரத்தை ஏற்று நடித்தார்.[2] மனோகர் ஒளிப்பதிவு செய்ய, எம். உமாநாத் படத்தொகுப்பு செய்தார். விக்ரம் மற்றும் வாசு படப்பிடிப்புத் தளங்களில் படப்பிடிப்பு நடந்தது.[2] உதவி இயக்குநராக துரை இருந்தபோது, மைசூரில் படப்பிடிப்புப் பணியில் இருந்தார். அப்போது அப்படப்பிடிப்பை பாலியல் தொழிலாளிகள் சிலர் பார்க்க வந்தனர். துரைக்கு அவர்கள் மீது பரிதாபம் வந்தது. அங்குதான் அவளும் பெண் தானே படத்துக்கான ஒரு யோசனை அவருக்குப் பிறந்தது. வாழ்கையில் வழுக்கிய பெண் திருமணத்திற்குப் பிறகு புதிதாக வாழ்க்கையைத் துவங்குகிறாள் என்பதுபோல படத்தின் முடிவை அமைக்க விரும்பினார். ஆனால் அதை இரசிகர்கள் ஏற்க்கமாட்டார்கள் என்று விநியோகஸ்தர்கள் பிடிவாதமாக இருந்ததால், படத்தின் முடிவு சோகமாக மாற்றப்பட்டது.[3] இசைஇப்படத்திற்கு வி. குமார் இசையமைத்தார். பாடல் வரிகளை வாலி எழுதினார். எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா, கே. ஜமுனா ராணி ஆகியோர் பிண்ணணிப் பாடிடார்.[2] படத்தில் இரண்டு பாடல்கள் மட்டுமே இருந்தன.[4] வரவேற்புஅவளும் பெண் தானே படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.[2] முத்துராமன், சுமித்ரா, எம். ஆர். ஆர். வாசு ஆகியோரின் நடிப்பைப் பாராட்டிய கல்கியின் காந்தன், துரை எழுதிய வசனங்களுக்கு நூறு மதிப்பெண்கள் கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். மேலும் துணிச்சலாக புனையப்பட்ட படம் என்று கூறினார். ஏ சான்றிதழ் பெற்ற படமான இதற்கு நடிப்பு, சிறந்த இயக்கத்தின் காரணமாக ரசிகர்கள் ஏ சான்றிதழை வழங்குவார்கள் என்று முடித்தார்.[5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia