ஆர். முத்துராமன்

முத்துராமன்
பிறப்புமுத்துராமன் இராதாகிருஷ்ணன் ஓந்திரியர்
(1929-07-04)4 சூலை 1929
ஒக்கநாடு கிராமம், ஒரத்தநாடு, தஞ்சாவூர், இந்தியா
இறப்பு16 அக்டோபர் 1981(1981-10-16) (அகவை 52)
உதகமண்டலம்; தமிழ்நாடு, இந்தியா
மற்ற பெயர்கள்நவரசத் திலகம்
பணிநடிகர், தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1955–1981
பெற்றோர்(கள்)இராதாகிருஷ்ணன் ஓந்திரியர்
ரத்னாவதி
வாழ்க்கைத்
துணை
சுலோச்சனா முத்துராமன்
பிள்ளைகள்4 (கார்த்திக் உட்பட)

முத்துராமன் (Muthuraman) தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார்.[1] இவர் 1960-1970களில் முன்னணி நடிகராக இருந்தார். நடிகர் எஸ் வி சகஸ்ரநாமம் நடத்தி வந்த "சேவா ஸ்டேஜ்" நாடகங்களில் நடித்து வந்தார். நவரச திலகம் எனவும் அழைக்கப்பட்டார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

அக்காலத்திய முன்னணி இயக்குனர்களான ஸ்ரீதர், கே. பாலச்சந்தர் ஆகியோரின் திரைப்படங்கள் பலவற்றில் இவர் நடித்தார்.

தொடக்க கால வாழ்க்கை

தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு வட்டத்தில் ஒக்கநாடு என்ற ஊரில் ராதாகிருஷ்ணன் ஓந்திரியர் - ரத்னாவதி அம்மாள் தம்பதியருக்கு மகனாக 1929-ம் ஆண்டு ஜூலை மாதம் 4-ம் தேதி பிறந்தார். அங்குள்ள பள்ளியில்தான் 5 ஆம் வகுப்பு வரை படித்திருக்கிறார். முத்துராமனுக்கு பூர்வீகத்தில் 6 ஏக்கர் நன்செய் நிலமும், ஒரு வீடும் சொந்தமாக இருந்திருக்கிறது.[2][3] முத்துராமனுடைய தந்தையார் ஒரு வழக்கறிஞர். இவருடைய மாமா ஒரு காவல் துறை அதிகாரி. குடும்பத்தில் யாருக்கும் நாடக அல்லது திரைத்தொழிலில் தொடர்பு கிடையாது. இருப்பினும் முத்துராமனுக்கு நுண்கலை மற்றும் திரைத்துறையில் ஆர்வம் இருந்திருக்கிறது. முத்துராமன் தனது குடும்பத்தின் வற்புறுத்தலின் பேரில் முதலில் ஒரு அரசு ஊழியராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கியிருக்கிறார். ஆரம்பத்தில் நாடக நடிகராகத்தான் தன் திரைவழிப் பயணத்தை தொடங்கினார். எஸ். எஸ். ராஜேந்திரனுடன் இணைந்து, எஸ். எஸ். ஆர் நாடக மன்றத்தில் தொடர்ந்து பல நாடங்களில் நடித்தார். மகாகவி பாரதியாரின் கவிதைவரி நாடகத்தில் நடித்ததன் மூலம் எல்லோரிடத்திலும் தனித்துவமான கவனம் பெற்றார். [4] மிகவும் தாமதமாகவே அவர் திரைத்துறைக்கு வந்திருக்கிறார். இவர் மனைவி சுலோசனா மற்றும் மகன்கள் கணேஷ் மற்றும் நடிகர் கார்த்திக் ஆவார்கள். நடிகர் கௌதம் கார்த்திக் இவருடைய பேரன் ஆவார்.

திரையுலக வாழ்க்கை

முன்னணிக் கதாநாயகனாக பல படங்களில் நடித்தபோதும், தன்னை முன்னிறுத்தாத, கதாநாயகியை முன்னிறுத்தும் பல படங்களில் (கே. ஆர். விஜயா, சுஜாதா ஆகியோருடன்) நடித்துள்ளார். மேலும், அப்போதைய முன்னணி நட்சத்திரங்களாக இருந்த எம்.ஜி.ஆர் ('என் அண்ணன்', 'கண்ணன் என் காதலன்' போன்றவை) மற்றும் சிவாஜி கணேசன் ('பார் மகளே பார்', 'நெஞ்சிருக்கும் வரை', 'சிவந்த மண்' போன்றவை) ஆகியோருடன் பல திரைப்படங்களில் துணைக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். தனது காலத்தில் அல்லது தனக்குப்பின் அறிமுகமான ஜெய்சங்கர் (கனிமுத்துப் பாப்பா), ரவிச்சந்திரன் ('காதலிக்க நேரமில்லை') ஏ. வி. எம். ராஜன் ('பதிலுக்குப் பதில்', 'கொடிமலர்') ஆகியோருடன் இரண்டாவது நாயகனாகவும் நடித்துள்ளார். தனது திரைப்படங்கள் பலவற்றிலும் மிகைப்படுத்தாத தன்னம்பிக்கை மிகுந்த நடிப்பிற்காகப் பெயர் பெற்றார்.

இவரது இறுதிப்படம் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்த போக்கிரி ராஜாவாகும். இதில் வில்லன் வேடம் ஏற்றிருந்த முத்துராமன், ஒரு வெளிப்புறப்படப்பிடிப்பிற்காக உதகமண்டலம் சென்றிருந்தார், அங்கே உடற்பயிற்சி செய்யும் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு சரிந்துள்ளார், மருத்துவமனைக்கு செல்லும் முன்பே இதய நிறுத்தம்மாரடைப்புஏற்பட்டு காலமானார். அச்சமயமே, இவரது மகனான கார்த்திக் கதாநாயகனாக பாரதிராஜா வின் புகழ்பெற்ற அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகவாகவிருந்தார்.

நடித்த திரைப்படங்களின் பட்டியல்

இது முழுமையான பட்டியல் அல்ல.

1950களில்

ஆண்டு திரைப்படம் ஏற்ற வேடம் உடன் நடித்தவர்கள் இயக்குநர் குறிப்புகள்
1959 சகோதரி கே. பாலாஜி, ராஜசுலோசனா ஏ. பீம்சிங்
1959 உலகம் சிரிக்கிறது எம். ஆர். ராதா, சௌகார் ஜானகி ஆர். ராமமூர்த்தி
1959 நாலு வேலி நிலம் எஸ். வி. சகஸ்ரநாமம், பண்டரிபாய், மைனாவதி முக்தா சீனிவாசன்
1959 மாலா ஒரு மங்கல விளக்கு எம். ஆர். ராதா, தேவிகா எஸ். முகர்ஜி

1960களில்

பார் மகளே பார் நெஞ்சில் ஓர் ஆலயம் பஞ்சவர்ணக்கிளி காதலிக்க நேரமில்லை ஊட்டி வரை உறவு படித்தால் மட்டும் போதுமா கொடி மலர் அன்னை இல்லம் சர்வர் சுந்தரம் பழநி போலீஸ்காரன் மகள் வாழ்க்கை கற்பகம் சித்தி வானம்பாடி மேஜர் சந்திரகாந்த் கலைக்கோயில் எதிர் நீச்சல் நவக்கிரகம் மகாலக்‌ஷ்மி மல்லியம் மங்களம் சுமைதாங்கி குங்குமம் மணியோசை அம்மா எங்கே? தெய்வத் திருமகள் கர்ணன் நானும் மனிதன் தான் திருவிளையாடல் மகாகவி காளிதாஸ் நாணல் பணம் தரும் பரிசு பூஜைக்கு வந்த மலர் தாயின் கருணை நம்ம வீட்டு லக்‌ஷ்மி மறக்க முடியுமா? அனுபவம் புதுமை அனுபவி ராஜா அனுபவி பாமா விஜயம் தெய்வச்செயல் முகூர்த்தநாள் நான் நெஞ்சிருக்கும் வரை ராஜாத்தி சீதா தங்கை திருவருட்செல்வர் தேவி பூவும் பொட்டும் டீச்சரம்மா தேர்த்திருவிழா உயிரா? மானமா? அவரே என் தெய்வம் கண்ணே பாப்பா காவல் தெய்வம் நிறைகுடம் சிவந்த மண் சுபதினம் துலாபாரம்

1970களில்

  1. அவளும் பெண்தானே

1980களில்

ஆண்டு திரைப்படம் ஏற்ற வேடம் உடன் நடித்தவர்கள் இயக்குநர் குறிப்புகள்
1982 போக்கிரி ராஜா ரஜினிகாந்த், ஸ்ரீதேவி எஸ். பி. முத்துராமன் இறுதி திரைப்படம்
1980 குரு ரகு கமல்ஹாசன், ஸ்ரீதேவி ஐ. வி. சசி

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

  1. R. Muthuraman, IMDb, retrieved 29 November 2008
  2. "ஜென்டில்மேன்' பெயரெடுத்த முத்துராமன்". தினத்தந்தி.
  3. "நடிகர் ஆர். முத்துராமன்". Cinemapluz.
  4. "திரைத்துறையில் ஒரு நல்முத்து". தினமணி.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya