அவிந்தன்கிருட்டிண வர்மன் (அவிந்தன்) கங்க வம்சத்தின் 6 வது அரசராக அறியப்படுகிறார். இவரது ஆட்சிக்காலத்தை அறுதியிட்டுக் கூறும் சான்றுகள் ஏதும் கிடைக்கப் பெறவில்லை. இவர் வளத்துக் கொண்ட மாதவ மகாதிராயனின் மகன் என்கிறது கொங்கு தேச ராஜாக்கள் கையேட்டுப் பிரதி.[1] தலவன்புரம்கொங்கு தேசத்தை ஆண்ட கங்க வம்ச அரசர்களில் இவன் (தலவன்புரம்) தலக்காட்டை தலைநகராகக் கொண்டு கொங்கு தேசத்தையும் கன்னட தேசத்தையும் நீதி நெறி தவறாது ஆட்சி செய்தார் எனவும், பல தேச மன்னர்களை வென்று அவர்களிடமிருந்து கப்பம் பெற்று ஆட்சி செய்தார் எனவும், அறியமுடிகிறது.[2] தானசாசனம்கிருட்டிண வர்மன் தனது ஆட்சிக் காலத்தில் பஞ்சலிங்க தலங்களைக் கட்டி சைவ சமயத் தொண்டு செய்தான் எனவும், பஞ்சலிங்க தலங்களுக்கு நிலம் தானம் செய்தது பற்றி இக்கோவில் கல்வெட்டுக்களில் காணக்கிடைக்கும்.[3][4] இரண்டு அரசர்கள்கொங்கு தேசத்தையும் கன்னட தேசத்தையும் ஆட்சி செய்த கிருட்டிண வர்மன் பிள்ளை இல்லாமல் போகவே விஷ்ணுகோப மகாதிராயனைப் போலவே பரிகுலாத்திரிராயன்மகன் டிண்டீகராயனை தத்து எடுத்துக்கொண்டான். ஆனால் கிருட்டிண வர்மன் மந்திரிகளும், சேனாதிபதிகளும், ஏற்காமல் கிருட்டிண வர்மனுடைய தங்கை மகனான கொங்கணி என்பவனை மன்னன் ஆக்கினார்கள்.[3] இவற்றையும் பார்க்கவும்சான்றாவணம்
|
Portal di Ensiklopedia Dunia