அவேலி மாவட்டம்
ஹவேலி மாவட்டம் (Haveli District), பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஆசாத் காஷ்மீர் பகுதியில் உள்ள 10 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1] 2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி 598 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ஹவேலி மாவட்ட மக்கள் தொகை 1,52,124 ஆகும்.[2] இம்மாவட்டத்தில் பேசப்படும் முக்கிய மொழிகள் பகாரி மொழி (65%), குஜாரி மொழி (30%) மற்றும் காஷ்மீரி மொழி (5%) ஆகும்.[3][4] மாவட்ட நிர்வாகம்அவேலி மாவட்டம் 3 வருவாய் வட்டங்களைக் கொண்டது. அவைகள்:
இம்மாவட்டம் 12 ஒன்றியக் குழுக்களையும், 95 கிராமங்களையும் மற்றும் போர்வார்டு ககுத்தா எனும் நகராட்சியையும் கொண்டது. புவியியல்பீர் பாஞ்சால் மலைத்தொடரில் 8000 அடி உயரத்தில் ஹவேலி மாவட்டம் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் மிக உயரமான பெதோரி மலைச்சிகரம் 12,228 அடி உயரத்தில் உள்ளது.[5]இதன் வடக்கிலும், வடகிழக்கிலும் இந்தியாவின் பாரமுல்லா மாவட்டம், தெற்கில் பூஞ்ச் மாவட்டமும், மேற்கில் பாக் மாவட்டம் மற்றும் பூஞ்ச் மாவட்டம், பாகிஸ்தான் எல்லைகளாக உள்ளது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia