அஹமது ஒமர் சையது ஷேக்அஹமது ஒமர் சையது ஷேக் (Ahmed Omar Saeed Sheikh உருது: احمد عمر سعید شیخ) (பிறப்பு: டிசம்பர் 23, 1973) பாகிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட பிரித்தானியன் ஆவான். இவனுக்கு உமர் ஷேக், ஷேக் உமர், ஷேக் சையது, முஸ்தபா முகம்மது அஹமது போன்ற பெயர்களும் உண்டு. ஜெய்ஸ்-இ-முகமது, அல் காயிதா, ஹர்கத்-உல்-முஜாகிதீன் மற்றும் தாலிபான் போன்ற தீவிரவாதக் குழுக்களுடன் தொடர்புடையவன் ஆவான். கைது1994 ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த சுற்றுலாப் பயணிகளை கடத்தியாற்காக கைது செய்யப்பட்டு திகார் சிறைச் சாலையில் அடைக்கப்பட்டான். பின்னர் கடத்தப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை விடுவிக்க தீவிரவாதிகளால் விடுவிக்கக் கோரிக்கை விடப்பட்டவன். கடத்தப்பட்ட விமானப் பயணிகளைக் காக்கும் பொருட்டு இவன் விடுவிக்கப்பட்டான். விடுதலைக்குப் பின் அமெரிக்கப் பத்திரிகையாளர் டேனியல் பேர்ள் என்பவரைக் கொலை செய்த குற்றத்திற்காக[1] கைது செய்து பின்னர் 2002 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் நாள் மரண தண்டனை என தீர்ப்பளிக்கப்பட்டது.[2] பின்னர் இவன் இங்கிலாந்து நாட்டின் உளவாளியாக இருக்கக்கூடுமோ என விசாரணைக்காக பாகிஸ்தானின் ஹைதிராபாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.[3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia