ஆஃபினியம் கார்பைடு அல்லது ஆஃபினியம்(IV)கார்பைடு(Hafnium carbide) என்பது HfC என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல்சேர்மமாகும். இதனுடைய உருகுநிலை சுமார் 39000செவெப்பநிலையாகும். இச்சேர்மமே மிகவும் அதிக அனல் எதிர்ப்பு இருமச் சேர்மமாக அறியப்படுகிறது[2]. இருந்தபோதிலும் ஆஃபினியம் கார்பைடு குறைவான ஆக்சிசனேற்ற எதிர்ப்பையே கொண்டுள்ளது. 430 0செ வெப்பநிலையில் இது ஆக்சிசனேற்றம் அடையத் தொடங்குகிறது[3] .
பொதுவாகவே ஆஃபினியம் கார்பைடு குறைவுக் கார்பன்களையே கொண்டிருக்கும். எனவே அதன் உட்கூறுகளை அல்லது பொதிவைக் குறிப்பிடுகையில் HfCx (x = 0.5 to 1.0) என்றே குறிப்பிடுவர். மேலும், கார்பனின் அளவு எதுவாக இருந்தாலும் இதன் படிக அமைப்பு கனசதுர பாறை உப்பு படிக அமைப்பிலேயே காணப்படுகிறது[4].
ஆஃபினியம்(IV) ஆக்சைடை கார்பனுடன் சேர்த்து 1800 முதல் 2000 0செவெப்பநிலைக்கு சூடாக்குவதால் அது ஒடுக்கமடைந்து ஆஃபினியம் கார்பைடு தூள் உருவாகிறது. ஆஃபினியம்(IV) ஆக்சைடில் உள்ள ஆக்சிசன் முழுவதையும் நீக்குவதற்கு மிகநீண்ட நேரம்வரை வினை செயல்முறை நிகழ்கிறது. தொழில் நுட்ப சிக்கல் மற்றும் அதிகமான பொருட்செலவு போன்ற காரணங்களால் , இம்முறைக்கு மாறாக மீத்தூய்மை ஆஃபினியம் கார்பைடு பூச்சு முறையும் பின்பற்றப்படுகிறது. இதற்காக மீத்தேன், ஐதரசன் மற்றும் ஆஃபினியம்(IV) குளோரைடு வாயுக்களின் வாயுக்கலவை படியவைத்தல் முறையில் பூசப்படுகிறது. ஆஃபினியம் கார்பைடின் அதிக உருகுநிலை மற்றும் அதிகக் கடினத்தன்மைகளின் காரணமாக இது குறைந்த அளவான பயன்களையே கொண்டுள்ளது.[2]
ஆஃபினியம் கார்பைடின் இணைக்காந்தப் பண்புகள் x ≤ 0.8 முதல் x இன் அதிக மதிப்புக்கு ஏற்ப எதிர்காந்தப் பண்புக்கு மாறுகின்றன. ஆஃபினியம் கார்பைடின் படிக அமைப்பை ஒத்த TaCx இன் காந்தப் பண்புகள் இதற்கு நேர் எதிரான பண்புகளைக் கொண்டுள்ளது. அதாவது எதிர்காந்தப் பண்பிலிருந்து இணைக்காந்தப் பண்பிற்கு மாறுகிறது[5].
↑Physical Constants of Inorganic Compounds in Lide, D. R., ed. (2005). CRC Handbook of Chemistry and Physics (86th ed.). Boca Raton (FL): CRC Press. pp. 4–44 ff. ISBN0-8493-0486-5.
↑Shimada, Shiro (1992). "Oxidation Kinetics of Hafnium Carbide in the Temperature Range of 480o to 600oC". Journal of the American Ceramic Society75 (10): 2671–2678. doi:10.1111/j.1151-2916.1992.tb05487.x.
↑Lavrentyev, A; Gabrelian, B; Vorzhev, V; Nikiforov, I; Khyzhun, O; Rehr, J (2008). "Electronic structure of cubic HfxTa1–xCy carbides from X-ray spectroscopy studies and cluster self-consistent calculations". Journal of Alloys and Compounds462 (1-2): 4–10. doi:10.1016/j.jallcom.2007.08.018.