இலந்தனம் ஆஃப்னேட்டு (Lanthanum hafnate) என்பது La2Hf2O7 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல்சேர்மமாகும். இலந்தனம் ஆஃபினியம் ஆக்சைடு என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. இலந்தனம், ஆஃபினியம் ஆகிய தனிமங்களின் கலப்பு ஆக்சைடு என்று இது வகைப்படுத்தப்படுகிறது.
பண்புகள்
இலந்தனம் ஆஃப்னேட்டு நிறமற்ற ஒரு பீங்கான் பொருளாகும்.[2] இலந்தனம் அணுக்களும் ஆஃப்னியம் அணுக்களும் கனசதுர அணிக்கோவையில் அடுக்கப்பட்டுள்ளன. 1000 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு (1,270 கெல்வின்; 1,830 °பாரங்கீட்டு) கீழ் இந்த கட்டமைப்பு உருக்குலைந்த புளோரைட்டு வகை கட்டமைப்பாக இருக்கும். 1000 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு மேலான வெப்பநிலையில் இது பைரோகுளோர் கட்டத்திற்கு மாறுகிறது. 800 °[செல்சியசு]] வெப்பநிலைக்கு (1,070 கெல்வி; 1,470 °பாரங்கீட்டு) கீழே இது படிக உருவமற்றும் காணப்படுகிறது.[3][4]
18 கிகா பாசுக்கல் அழுத்தத்தில் இலந்தனம் ஆஃப்னேட்டு இதன் உட்பொதிந்துள்ள ஆக்சைடுகளாக சிதைவடைகிறது.[5]
ஒளிர்தல்
அடிப்படைப் பொருளில் உள்ள ஆக்சிசன் காலியிடங்கள், 460 நானோமீட்டருக்கு அருகில் உச்சத்துடன், புலப்படும் ஒளி நிறமாலை முழுவதும் ஒளிர்வைக் கொடுக்கின்றன.[6] ஒளிர்வுப் பண்புகளை பல்வேறு அரிய பூமி மற்றும் குழு 4 உலோகங்கள் மூலம் கலப்பு செய்து இலேசான மாற்றங்களை செய்ய முடியும்.[7][8] உதாரணமாக, La2Hf2O7:Eu3+ நானோ துகள்கள் புற ஊதா அல்லது எக்சு கதிர் வீச்சுக்கு வெளிப்படும் போது 612 நானோமீட்டருக்கு அருகில் ஒளி ஒளிர்தல் அல்லது கதிரியக்க ஒளிர்தலை வெளியிடுகிறது.[9]
தயாரிப்பு
தனிமங்களை தூள் வடிவில் எரிப்பதன் மூலம் மொத்தமாக பீங்கானைப் பெற முடியும். பின்னர் பொடியை 180 மெகாபாசுக்கல் மற்றும் 1,850 °செல்சியசு (2,120 கெல்வின்; 3,360 °பாரங்கீட்டு) வெப்பநிலையில் 6 மணி நேரத்திற்கு அழுத்தியும் சூடுபடுத்திப் பிணைத்தும் தயாரிக்கலாம்.:[2]
4 La + 4 Hf + 7O2 → 2 La2Hf2O7
கரைசலில் இருந்து ஆஃபினியம் மற்றும் இலந்தனம் ஐதராக்சைடுகளை வீழ்படிவாக்கி பின்னர் 600–1,400 °செல்சியசு வெப்பநிலையில் (873–1,673 கெல்வின்; 1,112–2,552 °பாரங்கீட்டு) காற்றில் 3 மணி நேரம் சுடுவதன் மூலமும் இதை தயாரிக்கலாம்:
↑ 2.02.1Ji, Yaming; Jiang, Danyu; Fen, Tao; Shi, Jianlin (March 2005). "Fabrication of transparent La2Hf2O7 ceramics from combustion synthesized powders". Materials Research Bulletin40 (3): 553–559. doi:10.1016/j.materresbull.2004.10.010.
↑Popov, V V; Menushenkov, A P; Yastrebtsev, A A; Zubavichus, Ya V (September 2016). "La 2 Hf 2 O 7 crystal and local structure changes on the fluorite - pyrochlore phase transition". Journal of Physics: Conference Series747 (1): 012043. doi:10.1088/1742-6596/747/1/012043. Bibcode: 2016JPhCS.747a2043P.
↑Blanchard, Peter E. R.; Liu, Sam; Kennedy, Brendan J.; Ling, Chris D.; Avdeev, Max; Aitken, Jade B.; Cowie, Bruce C. C.; Tadich, Anton (7 February 2013). "Investigating the Local Structure of Lanthanoid Hafnates Ln 2 Hf 2 O 7 via Diffraction and Spectroscopy". The Journal of Physical Chemistry C117 (5): 2266–2273. doi:10.1021/jp311329q.
↑Garg, Nandini; Pandey, K. K.; Murli, Chitra; Shanavas, K. V.; Mandal, Balaji P.; Tyagi, A. K.; Sharma, Surinder M. (13 June 2008). "Decomposition of lanthanum hafnate at high pressures". Physical Review B77 (21): 214105. doi:10.1103/PhysRevB.77.214105. Bibcode: 2008PhRvB..77u4105G.
↑Eagleman, Yetta; Weber, Marvin; Derenzo, Stephen (May 2013). "Luminescence study of oxygen vacancies in lanthanum hafnium oxide, La2Hf2O7". Journal of Luminescence137: 93–97. doi:10.1016/j.jlumin.2012.10.034. Bibcode: 2013JLum..137...93E.