ஆப்கானிசுத்தானில் பெண்கள் உரிமைகள்
ஆப்கானித்தானில் பெண்கள் உரிமைகள் கடந்த பல ஆண்டுகளில் பலவாறு இருந்து வந்துள்ளன. பெண் உரிமைகள் மிகவும் பாதிக்கப்பட்ட அல்லது கட்டுப்படுத்தப்பட்ட நாடுகளில் ஆப்கானிசுத்தானும் ஒன்று. கல்வி உரிமை, வேலை செய்ய உரிமை, சுதந்திரமாக நடமாடும் உரிமை, சுதந்திரமாக உடை உடுத்த உரிமை, மருத்துவ உதவி பெறும் உரிமை போன்ற அடிப்படை உரிமைகளே ஆப்கானிசுத்தான் பெண்களுக்கு பல காலமாக மறுக்கப்பட்டு இருந்தன. 2001 இற்கு பின்னர் தலிபான் வீழ்ச்சிக்குப் பின்னர் அமைக்கப்பட்ட அரசமைப்புச் சட்டத்தில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் சட்டத்தின் முன் சம உரிமைகளும் பொறுப்புகளும் இருப்பதாக வரையறை செய்தாலும், நடைமுறைகளில் மாற்றங்கள் சிறிதளவே நடைபெற்றது.2021இல் மீண்டும் அடிப்படைவாத தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில் இவற்றின் நடப்புநிலை தெளிவற்றே உள்ளது. ஆப்கானித்தானின் மக்கள்தொகை ஏறத்தாழ 34 மில்லியன்.[2] இதில் 14.2 மில்லியன் பெண்கள்.[3] சுமார் 22% ஆப்கானியர்கள் நகர்ப்புறங்களிலும் ஏனையவர் நாட்டுப்புறங்களிலும் வாழ்கின்றனர்.[4] உள்ளூர் வழக்கப்படி பெரும்பாலான பெண்கள் தங்கள் உயர்நிலைப் பள்ளிக் கல்வியை முடித்த நிலையிலேயே திருமணம் செய்விக்கப்படுகின்றனர். பெரும்பாலோர் வீட்டுத் தலைவிகளாகவே தங்கள் வாழ்நாளைக் கழிக்கின்றனர்.[5] 1964இல் சீரமைக்கப்பட்ட அரசியலமைப்பின்படி பெண்களுக்கு சமனிலை வழங்கப்பட்டது.[6] இருப்பினும், 1990களிலிருந்து ஆட்சியிலிருந்த வெவ்வேறு அரசுகளின் கீழ் பெண்களுக்கான பல உரிமைகள், குறிப்பாக உள்நாட்டுப் போரின் போது தாலிபன்களின் பெண்ணிய அணுகுமுறையில், மறுக்கப்பட்டுள்ளன. 2001இல் ஆப்கானித்தான் இசுலாமிய அமீரக ஆட்சி நீக்கப்பட்ட பின்னர் புதிய இசுலாமியக் குடியரசில் பெண்களின் உரிமைகள் படிப்படியாக மேம்படுத்தப்பட்டன.2004ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பில் பெண்களுக்கு சட்டப்படி சமனிலை வழங்கப்பட்டது; இது பெரும்பாலும் 1964ஆம் ஆண்டின் அரசியலமைப்பை ஒத்திருந்தது.[7] இருப்பினும், இந்த உரிமைகளை பயன்படுத்துவது ஊரக பழக்க வழக்கங்களை ஒத்திசைந்து உள்ளது.[8] இது பன்னாட்டு பெண்ணுரிமையாளர்களுக்கு கவலை அளிப்பதாகவே உள்ளது.[9] 2021இல் மீண்டும் தாலிபான்கள் கட்டுப்பாட்டை எடுத்துக்கொண்ட பின்னர் இந்தக் கவலை கூடியுள்ளது.[10] வரலாறுஅமனுல்லா கான் ஆட்சிக்கு முன்னர்துராணிப் பேரரசு (1747-1823) காலத்திலும் பராக்சாய் பரம்பரைக் காலத்திலும் ஆப்கன் பெண்கள் ஆணாதிக்க பழக்கங்களை ஒட்டிய பர்தா அணிந்து தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். இது ஆப்கானித்தான் முழுமையும் பொதுவானதாக இருந்தபோதும் சில பகுதிகளிலும் சில இனக்குழுக்களிலும் இதற்கு விதிவிலக்கு இருந்தது. எடுத்துக்காட்டாக, நாடோடிப் பெண்கள் தங்கள் முகத்தை மறைக்கவில்லை; சிலர் தங்களது தலைமுடியையும் வெளிப்படுத்தி உடையணிந்திருந்தனர். ஆப்கானிய அரசர்கள் வழக்கமாக நான்கு அலுவல்முறை மனைவிகளையும் பல ஆசைக்கிழத்திகளையும் கொண்டிருந்தனர். இது பல நாட்டாரியல் வழக்கங்களை ஒட்டி இருந்தன. தவிர இந்த மனைவிகளும் துணைவிகளும் அந்தப்புரத்தில் அடிமைகளாக வாழ்ந்து வந்தனர். சமூகத்தில் பெண்களின் பங்கு மிகக் குறைந்திருந்தது. இருப்பினும் சில பெண்கள் கவிஞர்களாகவும் எழுத்தாளர்களாகவும் புகழ்பெற்று இருந்தனர். இதனை அந்தப்புர உரிமையற்ற சூழலிலும் செயற்படுத்த முடிந்தது. சர்கோனா அனா, மிர்மோன் ஆயேஷா,பாபொ ஜான் போன்றவர்கள் அந்தப்புரத்திலிருந்து கொண்டே அரசியலிலும் தாக்கமேற்படுத்தினர். [11] அமனுல்லா கான்![]() சில ஆப்கானிய அரசர்கள் பெண்களின் விடுதலையை மேம்படுத்த முயன்றனர். ஆயினும் இவை பெரும்பாலும் தோல்வியில் முடிந்தன. வெற்றி கண்ட ஒருசிலரில் முதன்மையானவர் 1919 முதல் 1929 வரை ஆண்ட அரசர் அமனுல்லா ஆவார். தம் நாட்டை நவீனப்படுத்தவும் ஒருங்கிணைக்கவும் பல சீர்திருத்தங்களை இவர் முயன்றார்.[12] ஆணாதிக்க குடும்ப வாழ்க்கை கட்டுப்படுத்தியிருந்த பொதுவாழ்க்கைக்கு பெண்கள் வர உதவினார். பெண்கள் கல்வியின் முதன்மைத்துவத்தை வலியுறுத்தி குடும்பங்கள் பெண்களை பள்ளிக்கூடங்களுக்கு அனுப்ப வைத்தார். முகத்திரைகளை விலக்கி மேற்கத்திய ஆடைகளை அணிவதை ஆதரித்தார்.[13] 1921இல் கட்டாயத் திருமணங்கள், சிறுமியர் திருமணம், மணப்பெண் விலை பேசுதல் ஆகியவற்றைத் தடை செய்யும் சட்டமியற்றினார். ஆப்கனில் பரவலாக இருந்தபலதுணை மணத்திற்குகட்டுப்பாடுகளை விதித்தார்.[13] அமனுல்லா கானின் மனைவியார் சொரயா அரசியும் இந்த சீர்திருத்தங்களில் முக்கியப் பங்காற்றி குடும்பம், திருமணம், கல்வி, பணிவாய்ப்பு ஆகியவற்றில் பெண்களின் நிலை மேம்பட துணை நின்றார்.[14] இவர் பெண்களுக்கான முதல் இதழை நிறுவினார்; அஞ்சுமான்-இ-நிசுவான் என்ற பெண்களுக்கான அமைப்பை உருவாக்கினார். 1920இல் மஸ்துரத் பள்ளி, 1921இல் இசுமத் மலாலை பள்ளி ஆகியவற்றை பெண்களின் கல்விக்காக கட்டினார். 1924 பெண்களின் மருத்துவத்திற்காக மசுரத் பெண்கள் மருத்துவமனையை நிறுவினார். அவரது அன்னையார் தொகுத்துவந்த இஷாதுல் நஸ்வான் என்ற இதழில் எழுதி வந்தார். [15] இவரே ஓர் எடுத்துக்காட்டாக தம் கணவருடன் பொதுவிடங்களில் இணைந்து தோன்றியும் முகத்திரையை விலக்கியும் பெண்களின் தனிமைப்படுத்தும் பழக்கத்தை விட்டொழித்தார்.[14] ஆப்கானித்தானத்தை ஆட்சி புரிந்தோரின் பட்டியலில் இவர் மட்டுமே பெண் என்பது சிறப்பாகும். இசுலாமிய பெண்ணியவாதிகளில் முதலாமவரும் மிகச் செல்வாக்கானவராகவும் இவர் குறிப்பிடப்படுகின்றார். இவ்விருவரின் சீர்திருத்தங்களுக்கு பலத்த எதிர்ப்பு எழுந்து 1929இல் ஆட்சி கவிழ்ந்தது.[16] தீவிர எதிர்வினையாற்று முகமாக அமனுல்லாவின் பின் வந்த அரசு பர்தா முறைமையை மீளவும் நிலைநாட்டியது.[17] பெண்கள் உரிமைகளை நிலைநாட்டும் சட்டங்களை எதிர்த்தது.[14] வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia