ஆப்கானித்தான் இசுலாமிய அமீரகம்
ஆப்கானித்தான் இசுலாமிய அமீரகம் (Islamic Emirate of Afghanistan)[7] (பஷ்தூ: د افغانستان اسلامي امارات, ட ஆப்கானிஸ்தான் இஸ்லாமி அமாரத்) 1996இல் தாலிபான்கள் ஆப்கானித்தானை ஆண்டபோது நிறுப்பட்ட அரசாகும்; 2001இல் அவர்களது வீழ்ச்சியுடன் இதுவும் முடிவுற்றது. தாலிபான்கள் உச்சத்தில் இருந்தபோது கூட அவர்கள் முழுமையான ஆப்கானித்தானை ஆளவில்லை; வடகிழக்கில் 10% நிலப்பகுதியின் ஆட்சி வடக்குக் கூட்டணி வசம் இருந்தது.[8] தாலிபான்களின் இரண்டாவது அமீரகம்அமெரிக்காவிடமிருந்து 15 ஆகஸ்டு 2021 அன்று ஆப்கானித்தானை கைப்பற்றிய தாலிபான்களின் ஆப்கானித்தான் இசுலாமிய அமீரகத்தின் இடைக்கால அரசின் பிரதம அமைச்சராக 7 செப்டம்பர் 2021 அன்று முகமது அசன் அகுந்து மற்றும் துணைப் பிரதமர்களாக அப்துல் கனி பராதர் மற்றும் மௌலவி ஹனாபி தேர்வு செய்யப்பட்டதாகவும், மேலும் அமைச்சரவையில் 19 கேபினெட் [தெளிவுபடுத்துக]அமைச்சர்களும், 11 துணை அமைச்சர்களும், இயக்குநர்களும் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தாலிபான்களின் செய்தித் தொடர்பாளர் சஃபியுல்லா முஜாகிதின் அறிவித்துள்ளார்.[9][10][11][12] முல்லா ஓமர் தலைமையில் 1996 - 2001 ஆண்டுகளில் நடைபெற்ற தாலிபான்களின் முதல் அரசுக்குப் பின், 20 ஆண்டுகளுக்குப் பின்னர் இது தாலிபான்களால் மீண்டும் தற்போது நிறுவப்படும் இரண்டாவது அரசாகும். மேற்சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia