ஆரி பாட்டர் அண்டு த காப் பிளட்டு பிரின்சு (திரைப்படம்)
ஆரி பாட்டர் அண்டு த காப் பிளட்டு பிரின்சு (Harry Potter and the Half-Blood Prince) என்பது 2009 ஆம் ஆண்டு வெளியான ஐக்கிய இராச்சிய- அமெரிக்க நாட்டு கனவுருப்புனைவுத் திரைப்படம் ஆகும். இது புதின எழுத்தாளர் ஜே. கே. ரௌலிங் என்பவர் எழுத்தில் 2005 ஆம் ஆண்டு இதே பெயரில் வெளியான நாவலை மையமாக வைத்து 'டேவிட் யேட்ஸ்'[3] என்பர் இயக்க, வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து மற்றும் விநியோகம் செய்தது. இந்த திரைப்படத்தில் டேனியல் ராட்க்ளிஃப், ரூபர்ட் கிரின்ட் மற்றும் எம்மா வாட்சன் ஆகியோர் முதன்மை கதாபத்திரத்தில் நடித்துள்ளார்கள். இத்திரைப்படம் ஆரி பாட்டர் ஹாக்வார்ட்சு மந்திரவாதப் பள்ளியில் படிகின்றமையும், விசித்திரமான மாயராஜ குமாரனின் புத்தகம் கிடைத்தல், காதலில் விழுதல் போன்றன இத்திரைப்படத்தில் இடம்பெறுகின்றன. மற்றும் இத்திரைப்படத்திலே ஹாக்வார்ட்சு மந்திரவாதப் பள்ளியின் தலைமை ஆசிரியரான அல்பசு டம்பில்டோர் செவரசு சிநேப்பால் கொல்லப்படுகிறார். ஆரி பாட்டர் அண்டு த காப் பிளட்டு பிரின்சு என்ற படம் 7 ஜூலை 2009 இல் இலண்டனில் திரையிடப்பட்டது.[4] மற்றும் ஜூலை 15 அன்று உலகளவில் வெளியிடப்பட்டது.[5] இந்த படம் ஒரு பெரிய வணிக வெற்றியைப் பெற்றது, இது உலகளவில் 934 மில்லியன் டாலர்களை வசூலித்தது. இது எல்லா நேரத்திலும் அதிக வருமானம் ஈட்டிய எட்டாவது படமாகவும். மற்றும் 2009 ஆம் ஆண்டின் இரண்டாவது அதிக வசூல் செய்த படம் ஆகும்.[6] இதன் ஆறாவது படமான ஆரி பாட்டர் அண்டு த டெத்லி அலோவ்சு - பாகம் 1 என்ற படம் இரண்டு பாகமாக 2010 ஆம் ஆண்டு வெளியானது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்இந்த தலைப்பைச் சார்ந்த மேற்கோள்கள் சில விக்கிமேற்கோள் திட்டத்தில் உள்ளன :ஆரி பாட்டர் அண்டு த காப் பிளட்டு பிரின்சு (திரைப்படம்)
|
Portal di Ensiklopedia Dunia