ஆரி பாட்டர் அண்டு த சேம்பர் ஆப் சீக்கிரட்சு (திரைப்படம்)
ஆரி பாட்டர் அண்டு த சேம்பர் ஆஃப் சீக்கிரெட்சு (Harry Potter and the Chamber of Secrets)[3][4] என்பது 2002 ஆம் ஆண்டு வெளியான ஐக்கிய இராச்சிய- அமெரிக்க நாட்டு கனவுருப்புனைவுத் திரைப்படம் ஆகும். இது புதின எழுத்தாளர் ஜே. கே. ரௌலிங் என்பவர் எழுத்தில் 1998 ஆம் ஆண்டு இதே பெயரில் வெளியான நாவலை மையமாக வைத்து கிரிஷ் கொலம்பஸ் என்பர் இயக்க, வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து மற்றும் விநியோகம் செய்தது. இந்த திரைப்படத்தில் டேனியல் ராட்க்ளிஃப், ரூபர்ட் கிரின்ட் மற்றும் எம்மா வாட்சன் ஆகியோர் முதன்மை கதாபத்திரத்தில் நடித்துள்ளார்கள். இது ஆரி பாட்டர் திரைப்படத் தொடரின் இரண்டாவது படமாக 15 நவம்பர் 2002 அன்று ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்காவில் வெளியானது. இந்த படம் விமர்சன மற்றும் வணிகரீதியான வெற்றி பெற்று உலகளவில் 879 மில்லியன் டாலர்களை வசூலித்தது. மற்றும் 2002 ஆம் ஆண்டு வெளியான த லார்டு ஆப் த ரிங்ஸ்: த டூ டவர்ஸ் என்ற படத்தை தொடர்ந்து அதிக வசூல் செய்த இரண்டாவது படமாக அமைந்தது. இதன் மூன்றாம் பாகமான ஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான் என்ற படம் 2004 ஆம் ஆண்டு வெளியானது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்இந்த தலைப்பைச் சார்ந்த மேற்கோள்கள் சில விக்கிமேற்கோள் திட்டத்தில் உள்ளன :ஆரி பாட்டர் அண்டு த சேம்பர் ஆப் சீக்கிரட்சு (திரைப்படம்)
|
Portal di Ensiklopedia Dunia