ஆர். பாலகிருஷ்ணன்
ஆர். பாலகிருஷ்ணன் (R. Balakrishnan) ஓர் இந்திய ஆட்சிப்பணி அலுவலரும், இந்தியவியல் மற்றும் திராவிடவியல் ஆய்வாளருமாவார். ஒடிசா மாநில கூடுதல் தலைமைச் செயலராகவும் வளர்ச்சி ஆணையராகவும் பணியாற்றி ஓய்விற்குப் பிறகு அம்மாநிலத்தின் சிறப்புத் தலைமை ஆலோசகர் பொறுப்பிலுள்ளார்.[2][3] இளமைக் காலம்திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் 1958 இல் பிறந்தார். முதுகலை தமிழ் இலக்கியமும் இதழியல் பட்டயமும் பெற்று, பத்திரிக்கையாளராகப் பணியைத் தொடங்கினார். இந்தியக் குடிமைப்பணித் தேர்வுகளை தமிழிலேயே முதன்முதலில் எழுதி வென்ற தேர்வராக[4] 1984 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் தேர்வானார். அரசுப்பணிபேரிடர் மேலாண்மை, தேர்தல் மேலாண்மை போன்ற பல அரசுப் பணிகளில் இந்தியா முழுவதும் பணியாற்றியுள்ளார். சிந்து சமவெளி ஆய்வுகள்சென்னை ரோஜா முத்தையா நூலகத்தில் உள்ள சிந்துவெளி மையத்தின் மதிப்புறு ஆலோசகராகவும் சிந்துவெளி தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டும் வருகிறார்.[5] ஐராவதம் மகாதேவன், அஸ்கோ பார்ப்போலா போன்ற அறிஞர்கள் முன்னிலையில் தனது சிந்துவெளி ஆய்வுக் கட்டுரையை கோவை செம்மொழி மாநாட்டில் சமர்பித்தார். சிந்துவெளி ஆய்வுகளுக்காக பெரியார்-மணியம்மை பல்கலைக் கழகம் 2017-ல் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.[6] வடமேற்கு இந்தியாவில் இன்றுவரை வழக்கிலுள்ள'கொற்கை,வஞ்சி, தொண்டி வளாகத்தை' ஆய்வுலகின் கவனத்திற்கு கொண்டு வந்தார். நூல்கள்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவர்சென்னை, தரமணியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். [8] காணொளிகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia