உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
International Institute of Tamil Studies
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் புது வளாகத்தின் முகப்பு
குறிக்கோளுரையாதும் ஊரே; யாவரும் கேளிர்
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
Every town is my town; Everyone is my relative
உருவாக்கம்1970 (1970)
தலைவர்ஆர். பாலகிருஷ்ணன்
அமைவிடம்
இரண்டாவது முதன்மைச் சாலை, சி. ஐ. டி வளாகம், டி.டி.டி.ஐ தபால், தரமணி
, , ,
வளாகம்தரமணி
மொழிதமிழ்
இணையதளம்www.ulakaththamizh.in

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (International Institute of Tamil Studies) தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின் புறநகர்ப் பகுதியான தரமணியில் அமைந்துள்ள ஒரு மொழியியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகும்.

வரலாறு

சனவரி 1968-இல் சென்னையில் நடைபெற்ற இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தொடர்ந்து அன்றைய தமிழ்நாட்டு முதலமைச்சர் "பேரறிஞர்" கா. ந. அண்ணாதுரை, பிரெஞ்சுத் தமிழறிஞர் ழான் ஃபில்லியொசா (Jean Filliozat), ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தின் (யுனெஸ்கோ) அன்றைய துணை பொது இயக்குநர் மால்கம் ஆதிசேசையா ஆகியோரின் முயற்சியால் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் உருவாக்கப்பட்டது.[1]

பிரிவுகள்

பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடம்

பழந்தமிழரின் சிறப்புகளை எடுத்துக்காட்டும் வகையில் சுடுமண் சிற்பம், சுதைச் சிற்பம், மரம், கல், உலோகம் ஆகியவற்றைக் கொண்டு படிமங்களாக வடிவமைத்த கலைப்பொருட்களைக் காட்சிப்படுத்தும் பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடம் இந் நிறுவனத்தில் 1 மார்ச் 2016 அன்று அன்றைய முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவால் திறந்துவைக்கப்பட்டது.[2] [3] இதில் தொல்காப்பியர் அரங்கு,திருவள்ளுவர் அரங்கு, கபிலர் அரங்கு,ஔவையார் அரங்கு, இளங்கோவடிகள் அரங்கு, கம்பர் அரங்கு, தமிழ்த் தாய் ஊடக அரங்கு ஆகியவற்றில் பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இக் கூடத்தின் பொறுப்பாளராக முனைவர் ஆ. மணவழகன் உள்ளார்.

சுவடியியல் பாதுகாப்பு மையம்

2014-இல் "தமிழ்நாடு முழுவதும் கண்டறியப்படும் சுவடிகள், தாள் சுவடிகள் மற்றும் அரிய நூல்கள் அனைத்தையும்" பாதுகாக்கும் வண்ணம் சுவடியியல் பாதுகாப்பு மையம் தொடங்கப்பட்டது.[4] இம் மையத்தின் பொறுப்பாளராக முனைவர் அ. சதிஷ் உள்ளார்.

இயக்குநர்கள்

எண் படம் பெயர்

(பிறப்பு–இறப்பு)

பதவிக்காலம்[5]
பதவியேற்பு பதவி விலகல் கால அளவு
1 கா. மீனாட்சிசுந்தரம்

(1925-2015)

1968 1972
2 ச. வே. சுப்பிரமணியன்

(1929-2017)

1972 1985
3 ஏ. என். பெருமாள் 1986 1987
4 க. த. திருநாவுக்கரசு

(1931- 1989)

1988 1989
5 சு. செல்லப்பன்

(1929- 2019)

1989 1991
6 அன்னி மிருதுளாகுமரி தாமசு 1991 1994
7 சு. இராமர் இளங்கோ 1994 2001
8 எசு. கிருட்டிணமூர்த்தி 2002 2005
9 ம. இராசேந்திரன்

(1951-)

சூன் 2006 திசம்பர் 2007
10 சீன் லாரன்சு (பொறுப்பு) 2008 (?) 2008
11 கரு. அழ. குணசேகரன்

(1955- 2016)

2008 2011
12 கோ. விசயராகவன் 2012 2021
13 செ.சரவணன் இ.ஆ.ப. 2021 2022
15 ப. அன்புச்செழியன்

(கூடுதல் பொறுப்பு)

8 பிப்ரவரி 2022 13 மார்ச்சு 2022 0 ஆண்டுகள், 33 நாட்கள்
14 ந. அருள்

(முழுநேரக் கூடுதல் பொறுப்பு)

27 ஏப்ரல் 2022 22 நவம்பர் 2022 0 ஆண்டுகள், 209 நாட்கள்
16 கோபிநாத் ஸ்டாலின்

(கூடுதல் பொறுப்பு) 

23 நவம்பர் 2022 (???)

புகழ்

"உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நோக்கும் போக்கும் மற்ற தமிழாய்வு நிறுவனங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட நிலையில் உருவாக்கப்பட்டதாகும். இந்தியாவின் பிற மொழி மாநிலங்களில் - உலகிலுள்ள பிற நாடுகளில் நடைபெறும் தமிழாராய்ச்சிக்கான மையமாக இவ்வமைப்பு இயங்க வேண்டும் என்பது அடித்தளக் கோட்பாடாகும்." என்றார் தமிழறிஞர் மணவை முஸ்தபா.[1]

வெளியீடுகள்

  1. ஊஞ்சல் இலக்கியம்; த. அழகப்பராசு (பதி.)
  2. தமிழெழுத்தின் வரிவடிவம்; சி. கோவிந்தராசனார்; 1993

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 Said, Nandhivarman (2006-08-03). "Manavai Mustafa on World Tamil Research Organization's Goals & Activities". Tamil News. Retrieved 2025-04-11.
  2. "பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூட திறப்பு விழா". Retrieved 2021-05-03.
  3. http://pazhanthamizharvazhviyal.org/about/
  4. 17-ம் நூற்றாண்டை சேர்ந்த அரிய நூல்கள் கண்டுபிடிப்பு: மின் எண்மம் செய்து வெளியிட முடிவு- உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு
  5. The ordinal number of the term being served by the person specified in the row in the corresponding period

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya