நத்தம்
நத்தம் (ஆங்கிலம்:Natham), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். நத்தம் நகரம் முந்தைய மதுரை மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 23,660 மக்கள்தொகை கொண்ட இப்பேரூராட்சி, 12.43 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும் கொண்டது. இது நத்தம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4] மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி வீடுகளும், 23,660 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 81.5% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,010 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 995 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர்.பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 5,329 மற்றும் 2 ஆகவுள்ளனர்.[5] ஆதாரங்கள்
|
Portal di Ensiklopedia Dunia