ஆர். பிரகாஷ்

ஆர். பிரகாஷ் (1901 – 28 மே 1956) என்பவர் தென்னிந்தியாவில் பல மவுனத் திரைப்படங்கள், தமிழ், தெலுங்கு படங்களை இயக்கி தயாரித்தவராவார். இவர் தந்தை ரகுபதி வெங்கய்யா நாயுடு என்னும் ஆர். வெங்கைய்யா சென்னையின் முதல் திரையரங்கமான சித்ராதிரிப்பேட்டையில் இயங்கிய கெயிட்டி சினிமா ஹால் என்ற திரையரங்கை தொடங்கி நடத்தியவராவார்.[1] தந்தையின் ஆலோசனையின் பேரில் பிரகாஷ் லண்டன், ஹாலிவுட் போன்ற இடங்களுக்குச் சென்று திரைப்பட பள்ளியில் சேர்ந்து திரைப்பட இயக்கம், ஒளிப்பதிவு அகியவற்றை முறையாக கற்று திரும்பி ஸ்டார் ஆப் ஈஸ்ட் பிலிம்ஸ் என்ற படப்பிடிப்பு தளத்தைத் தொடங்கி பல ஊமைப் படங்களை தயாரித்து இயக்கினார். இவரின் உதவியாளர்களாக இருந்த ஒய். வி. ராவ், சி. புல்லையா ஆகியோர் தென்னிந்தியாவின் புகழ்பெற்று துவக்ககால திரைப்பட இயக்குநர்கள் ஆவர்.[2]

இயக்கிய சில மவுனப் படங்கள்

  • கஜேந்திர மோட்சம்
  • நந்தனார்
  • பீஷ்மர் பிரதிக்ஞை

இயக்கிய பேசும் படங்கள்

மேற்கோள்கள்

  1. "தமிழ் சினிமா முன்னோடிகள்: இயக்குநர் ஆர்.பிரகாஷ்". ஆனந்த விகடன். Archived from the original on 2016-04-05. Retrieved 14 சனவரி 2017.
  2. பிரதீப் மாதவன் (30 திசம்பர் 2016). "தமிழ் சினிமா 100 நூற்றாண்டு நிறைவு: மவுனப் படத்தைப் பேசவைத்த வெங்கய்யா". கட்டுரை. தி இந்து. Retrieved 14 சனவரி 2017.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya