ஆலன் கேய்ன்பெர்கு
ஆலன் கேய்ன்பெர்கு (ஆங்கிலம்: Allan Heinberg) (பிறப்பு: சூன் 29, 1967) என்பவர் அமெரிக்க நாட்டு திரைப்படத் தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் வரைகதை புத்தக எழுத்தாளர் ஆவார். இவர் 2017 ஆம் ஆண்டு பாட்டி யென்கின்சு இயக்கியத்தில் வெளியான வொண்டர் வுமன் திரைப்படத்தின் திரைக்கதை எழுத்தாளராக பணிபுரிந்துள்ளார்.[1][2] அத்துடன் தி நேக்கட் ட்ரூத், பார்ட்டி ஆப் பைவ், செக்ஸ் அண்ட் தி சிட்டி, கில்மோர் கேர்ள்ஸ், தி ஓ.சி., கிரேஸ் அனாடமி, லுக்கிங் மற்றும் இசுகேன்டல் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை எழுதி மற்றும் தயாரித்துள்ளார். இவர் மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்திற்காக யங் அவெஞ்சர்ஸ் மற்றும் அதன் தொடர்ச்சியான அவெஞ்சர்ஸ்: தி சில்ட்ரன்ஸ் குரூஸேட் ஆகியவற்றை ஜிம் ஜிம் சியூங் என்பவருடன் இணைந்து எழுதி மற்றும் உருவாக்கியுள்ளார்.[3] மேலும் டிசி காமிக்சுக்காக ஜே.எல்.ஏ என்ற வரைகதையை ஜெப் ஜான்சு உடன் இணைந்து எழுதியுள்ளார். ஆரம்ப கால வாழ்க்கைகேய்ன்பெர்கு சூன் 29, 1967 இல் துல்சா, ஓக்லஹோமாவில் ஒரு யூத[4] குடும்பத்தில் பிறந்தார். அதைத்தொடர்ந்து ஓக்லஹோமாவில் உள்ள புக்கர் டி. வாஷிங்டன் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்று 1989 ஆம் ஆண்டில் ஆண்டு யேல் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia