ஆ. நமச்சிவாயம்
ஆறுமுகம் நமச்சிவாயம் (Arumugam Namassivayam) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், புதுச்சேரி அமைச்சரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் அங்கம் வகித்தவர். புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் 2016இல், நமச்சிவாயத்தை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தலை சந்தித்தது காங்கிரஸ் கட்சி, அப்போது இவர் வில்லியனூர் தொகுதியில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3] ஆனால் நாராயணசாமியை முதல்வராக அறிவித்தது காங்கிரஸ் கட்சி. பின்னர் இவருக்கு பொதுப்பணித்துறை ஒதுக்கப்பட்டது. அத்துடன் உள்ளாட்சி, கலால், வீட்டுவசதி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட முக்கிய இலாக்காக்களும் வழங்கப்பட்டன.[4] சனவரி 25, 2021 அன்று காங்கிரஸ் கட்சியின் அடிப்படை பொறுப்பில், தற்காலிக நீக்கம் செய்யப்படுவதாக புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் ஏ. வி. சுப்பிரமணியம் அறிவித்ததை தொடர்ந்து, தனது அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.[5] இதனைத் தொடர்ந்து ஜனவர் 28 2021 அன்று புது தில்லியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் இக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் முன்னிலையில் முன்னாள் புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் தீப்பாய்ந்தனுடன் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.[6] பின்னர் 2021 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில், மண்ணாடிப்பட்டு சட்டமன்றத் தொகுதியிலிருந்து பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதையடுத்து ரங்கசாமியின் நான்காவது அமைச்சரவையில் உள்துறை, மின்சாரம், தொழில்கள் மற்றும் வணிகம், கல்வி (பள்ளிக் கல்வி உயர்கல்வி), விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள். முன்னாள் படைவீரர் நலன் துறை அமைச்சராக பொறுப்பேற்றார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia