2021 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, ந. ரங்கசாமி 2021 மே 7 அன்று புதுச்சேரி முதல்வராக பதவியேற்றார். [1][2] 2021 மே 25 தேதியிட்ட புதுச்சேரி அரசாணை அறிவிப்பின்படி, அமைச்சரவையில் அமைச்சர்களாக ஏ. நமச்சிவயம், கே. லட்சுமிநாராயணன், சி. தேனீ ஜெயக்குமார், சந்திர பிரியங்கா, ஏ. கே. சாய் ஜே. சரவணக்குமார் ஆகியோரை அமைச்சர்களாக நியமிக்கபட்டனர்.
ரங்கசாமி அமைச்சரவையில் லட்சுமிநாராயணன், டி. தேனி ஜெயக்குமார், சந்திர பிரியங்கா ஆகியோர் என். ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் பாஜகவைச் சேர்ந்தவர்கள், புதுச்சேரி ஒன்றியப் பிரதேச அமைச்சரவையில் பா. ஜ. கட்சி இடம் பெற்றிருப்பது இதுவே முதல் முறை. அமைச்சரவையில் சந்திர பிரியங்கா இடம்பெற்றிருப்பதானதன் மூலமாக 41 ஆண்டுகளுக்குப் பிறகு அமைச்சரவையில் ஒரு பெண் உறுப்பினர் இடம்பெற்றிருப்பது மற்றொரு முக்கிய விசயமாகும். [3][note 1]
↑மறைந்த காங்கிரஸ் தலைவர் ரேணுகா அப்பாதுரை 1980-83 காலப்பகுதியில் முதல் பெண் அமைச்சராக இருந்தார், மேலும் அவர் எம் டி. ஆர். இராமச்சந்திரன் (திமுக) தலைமையிலான கூட்டணி அமைச்சரவையில் கல்வித் துறையைக் கொண்டிருந்தார்.