இசுக்காண்டியம்(III) ஐதராக்சைடு
இசுக்காண்டியம்(III) ஐதராக்சைடு (Scandium(III) hydroxide) என்பது Sc(OH)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இசுக்காண்டியம் தனிமத்தின் மூவிணைய ஐதராக்சைடு சேர்மம் என்றும் ஈரியல்பு சேர்மம் என்றும் இது வகைப்படுத்தப்படுகிறது.[2] இது தண்ணீரில் சிறிதளவு கரையும். இசுக்காண்டியம்(III) ஐதராக்சைடின் காரகாடித்தண்மை சுட்டெண் 7.85 அளவு கொண்ட நிறைவுற்ற கரைசலில் Sc(OH)3 சேர்மமும் Sc(OH)+ அயனியும் கலந்திருக்கும். தண்ணீரில் இசுக்காண்டியம்(III) ஐதராக்சைடின் கரைதிறன் அளவு 0.0279 மோல்/லிட்டர் ஆகும். நாட்பட்ட இசுக்காண்டியம்(III) ஐதராக்சைடு ScO(OH) ஆக மாறும். இது கரைதிறனை வெகுவாகக் குறைக்கும் (0.0008 மோல்/லிட்டர்)[3] தயாரிப்புஇசுக்காண்டியம் உப்புகளை கார ஐதராக்சைடுகளுடன் சேர்த்து வினை புரியச் செய்தால் இசுக்காண்டியம்(III) ஐதராக்சைடு உருவாகும்.[4] இவ்வினையில், வெவ்வேறு தொடக்கப் பொருட்கள் Sc(OH)1.75Cl1.25, Sc(OH)2NO3 மற்றும் Sc(OH)2.32(SO4)0.34.[5]Sc(OH)1.75Cl1.25, Sc(OH)2NO3 மற்றும் Sc(OH)2.32(SO4)0.34 போன்ற பல்வேறு இடைநிலைகளை உருவாக்கும். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia