இசுக்காண்டியம்(III) சல்பைடு
கட்டமைப்புSc2S3 சேர்மத்தின் படிக அமைப்பு சோடியம் குளோரைடு சேர்மத்தின் படிக அமைப்புக்கு நெருக்கமாக தொடர்புடையதாகும். இக்கட்டமைப்பு ஒரு கனசதுர சமகோள நெருக்கப் பொதிவு அயனிகளை அடிப்படையாகக் கொண்டதாகும். NaCl கட்டமைப்பில் அயனி அணிக்கோவையில் உள்ள அனைத்து எண்முக இடைவெளிளும் நேர்மின் அயனிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. Sc2S3 கட்டமைப்பில் மூன்றில் ஒரு பங்கு காலியாக உள்ளது. காலியிடங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் மிகவும் சிக்கலான முறையில், Fddd என்ற இடக்குழுவைச் சேர்ந்த ஒரு பெரிய செஞ்சாய்சதுர அலகு செல்லிற்கு வழிவகுக்கிறது.[1] தயாரிப்புஉலோக சல்பைடுகள் பொதுவாக இரண்டு தனிமங்களையும் சேர்த்து வெப்பமூட்டுவதால் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் இசுக்காண்டியத்தைப் பொறுத்தவரை, இந்த தயாரிப்பு முறையில் இசுக்காண்டிய மோனோசல்பைடு (ScS) மட்டுமே கிடைக்கிறது. இசுக்காண்டியம்(III) ஆக்சைடை பாயும் ஐதரசன் சல்பைடின் கீழ் 1550 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு அல்லது அதற்கு மேலாக கிராபைட்டு புடக்கலனில் இட்டு 2-3 மணிநேரத்திற்கு சூடுபடுத்தினால் Sc2S3 தயாரிக்கலாம்.[1]
உயர் வெப்பநிலைகளில் இசுக்காண்டியம்(III) குளோரைடு சேர்மத்துடன் உலர் ஐதரசன் சல்பைடு வாயுவைச் சேர்த்து வினைபுரியச் செய்தும் இசுக்காண்டியம்(III) சல்பைடு தயாரிக்கலாம்:[2]
வினை1100 ° செல்சியசு வெப்பநிலைக்கு மேல் சூடுபடுத்தினால் இசுக்காண்டியம்(III) சல்பைடு கந்தகத்தை இழந்து, Sc1.37S2.[1] போன்ற விகிதவியல் ஒவ்வா சேர்மங்களாகச் சிதைகிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia