இசுட்டேட்டன் தீவு (Staten Island, /ˌstætənˈaɪlənd/) அமெரிக்க மாநிலம்நியூயார்க்கில் உள்ள நியூயார்க் நகரத்தின் ஐந்து பரோக்களில் தென்மேற்கில் உள்ள பரோ ஆகும். நியூயார்க் மாநிலம் மற்றும் நகரத்தின் தெற்கு முனையில் இது அமைந்துள்ளது. இங்குள்ள மாநாட்டு மாளிகைப் பூங்கா நியூயார்க் மாநிலம் மற்றும் நியூயார்க் நகரத்தின் தெற்கு எல்லையாக உள்ளது.[2] இந்த பரோவை நியூ செர்சியிலிருந்துஆர்தர் கில், கில் வான் குள் என்ற இரு கடலோடைகள் பிரிக்கின்றன; நியூயார்க் நகரத்தின் மற்ற பகுதிகளிலிருந்து நியூயார்க் விரிகுடா பிரிக்கிறது. 2013 கணக்கெடுப்பின்படி இசுட்டேட்டன் தீவின் மக்கள்தொகை 472,621 ஆகும்.[1] நியூயார்க்கின் ஐந்து பரோக்களில் மிகவும் குறைந்த மக்கள்தொகை உள்ள பரோ இதுவாகும். ஆனால் பரப்பளவில் 59 sq mi (153 km2) உடன் மூன்றாவது பெரிய பரோவாக உள்ளது. இதுவும் ரிச்மாண்ட் கவுன்ட்டியும் ஒரே நிலப்பரப்பை குறிக்கின்றன;1975 வரை இந்த பரோவும் ரிச்மாண்ட் பரோ என்றே அழைக்கப்பட்டு வந்தது.[3] நகர அரசின் அக்கறையின்மையைக் கருதி இசுட்டேட்டன் தீவு சிலநேரங்களில் "மறந்துபோன பரோ" என இங்கு வாழ்வோரால் குறிப்பிடப்படுகின்றது.[4][5]
இசுட்டேட்டன் தீவு குறுங்கப்பற்சேவை கீழ் மேன்காட்டனுக்கும் இசுட்டேட்டன் தீவின் செயின்ட்.ஜார்ஜ் குறுங்கப்பல் முனையத்திற்குமிடையே கட்டணமில்லாச் சேவை வழங்குகிறது.
வாகனப் போக்குவரத்துக்காக புரூக்ளினிலிருந்துவெர்ரசானோ-நேரோசு பாலம் மூலமாகவும் நியூ செர்சியிலிருந்துஅவுட்டர்பிரிட்ஜ் கிராசிங், கோத்தல்சு பாலம், பயோன் பாலம் மூலமாகவும் இணைக்கப்பட்டுள்ளது. நியூயார்க் நகரத்தின் இந்த பரோ மட்டுமே சப்வே தொடர்வண்டியால் இணைக்கப்படாது உள்ளது. இசுட்டேட்டன் தீவு கட்டணமில்லாத குறுங்கப்பல் சேவையால் மேன்காட்டனுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 21 மில்லியன் பயணிகளை ஏற்றிச் செல்லும் இச்சேவை[6] 1700 களிலிருந்து இயக்கத்தில் இருக்கின்றது. ஒன்பது குறுங்கப்பல்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. விடுதலைச் சிலை, எல்லிசு தீவு, மற்றும் கீழ் மேன்காட்டன் காட்சிகளை காணும் வாய்ப்புள்ளதால் சுற்றுலாப் பயணிகளிடமும் இச்சேவை மிகவும் பெயர் பெற்றுள்ளது.
↑2013 borough population estimates are taken from the annual database of county population estimates from the U.S. Census Bureau, retrieved on May 13, 2014.