இசுபிலோர்னிசு
இசுபிலோர்னிசு (Spilornis) என்பது அசிபிட்ரிடே குடும்பத்தில் உள்ள கொன்றுண்ணிப் பறவை பேரினமாகும். முதிர்ச்சியடைந்த பறவைகள் அனைத்தும் அடர்நிற கொண்டைகளுடன் பிரகாசமான மஞ்சள் கண்களையும் அலகுப்பூவினையும் கொண்டது.[2] இந்த நடுத்தர அளவிலான இரைவாரிச் செல்லும் பறவை தெற்கு ஆசியாவின் காடுகளில் காணப்படுகின்றன. இவை பாம்பு-கழுகுகள் என்று அழைக்கப்படுகின்றன. திரையோட்ரியோர்கிசு மற்றும் யூட்ரியோர்கிசு பேரினத்தினைச் சேர்ந்த இரண்டு ஆப்பிரிக்கச் சிற்றினங்களுடன் இதன் பொதுப் பெயர் பகிரப்பட்டுள்ளது.[2] சொற்பிறப்பியல்கிரேக்கம்: σπιλος spilos “spot”; ορνις ornis, ορνιθος ornithos “bird”.[3] சிற்றினங்கள்பாரம்பரியமாக வரையறுக்கப்பட்டபடி, இந்த பேரினத்தில் 6 சிற்றினங்கள் உள்ளன. பல சிறிய தீவு பறவைகள், பொதுவாகக் கொண்டை பாம்புண்ணிக் கழுகு குழுவில் சேர்க்கப்பட்டவை , தனி சிற்றினங்களாகப் பிரிக்கப்பட வேண்டும் என்று முன்மொழியப்பட்டது.[2]
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia