இசுமிருதி இரானி
இசுமிருதி இரானி (ਸਮ੍ਰਿਤੀ ਈਰਾਨੀ) திருமணத்திற்கு முன்பு: இசுமிருதி மல்ஃகோத்ரா, மாற்று ஒலிப்பு:ஸ்மிருதி இரானி, Smriti Irani née Malhotra, பிறப்பு: 23 மார்ச் 1976) முன்னாள் ஒப்புருவாளரும் தொலைக்காட்சி நடிகையும் தயாரிப்பாளரும் தற்போதைய அரசியல்வாதியும் ஆவார்.[2]பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த இவர் நரேந்திர மோதியின் இரண்டாம் அமைச்சரவையில் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சராக 2019 முதல் 2024 வரை இருந்தார். முன்னர் இவர் மனித வள மேம்பாட்டு வளம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சராக அமைச்சகத்தின் அமைச்சராக 2014 - 2019 வரை பதவி வகித்தவர்.[3][4] 2019 ஆம் ஆண்டிற்கான மக்களவைத் தேர்தலில் இந்திய தேசியக் காங்கிரஸின் தலைவரும் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவருமான இராகுல் காந்தியை அமேதி தொகுதியில் தோற்கடித்தார். அமேதி தொகுதி நான்கு தசாப்தங்களாக ராகுல் காந்தியின் குடும்பத்தினர் வெற்றிபெற்ற தொகுதியாகும். சுமிதி ராணி 2011 ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்தெடுக்கப்பட்டார். இவர் ஆங்கிலம், இந்தி, மராத்தி, குஜராத்தி, வங்காளம் ஆகிய மொழிகளில் பேசும் திறனுடையவர் ஆவார். இளமையும் கல்வியும்தில்லியில் பஞ்சாபி–வங்காள குடும்பத்தில் மூன்று மகள்களில் மூத்தவராகப் பிறந்தார்.[5][6] ஒப்புருவாளராக புகழ்பெறத் தொடங்கும் முன்னர் மக்டொனால்ட்சில் சேவையாளராகப் பணியாற்றியிருக்கிறார்.[5][6] புனித சிசு ஆக்சிலியம் பள்ளியில் 12வது வகுப்பு வரை கல்வி பெற்றவர் பின்னர் மேற்படிப்பைத் தொடரவில்லை.[7][8] சர்ச்சைகோவாவில் உள்ள பேபின்டியா (Fabindia) என்ற கடையில் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா இருந்ததாக புகார் செய்தார்.[9] 2024 மக்களவைத் தேர்தல்2019இல் அமேதியில் இராகுல் காந்தியை 292973 வாக்குகளில் தோற்கடித்த இவர் 2024 தேர்தலில் கிசோரி லாலிடம் தோற்றார்
விருதுகள் மற்றும் பன்னாட்டு மாநாடுகள்இரானி, 2015ஆம் ஆண்டில் உலகப் பொருளாதார மன்றத்தால் இந்தியாவின் இளம் உலகத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த காலத்தில் இந்த விருது இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், அலிபாபா குழுமத்தின் தலைவர் ஜாக் மா, யாஹூ செயல் தலைவர் மரிசா, கூகுள் தலைவர் லாரி பேஜ், இத்தாலிய பிரதமர் மேட்டியோ ரென்சி போன்ற தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.[10] பாராளுமன்ற ஒன்றியத்தின் 126வது சட்டமன்றத்தில் இளம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான முதலாவது குழுவை நிறுவுவதற்கு பொறுப்பான பணிக்குழுவிற்கு ஆசிய பசிபிக் பிராந்தியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினராக இரானி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[11] 3 ஆண்டுகளாக உலக சுகாதார நிறுவனத்தின் ஓ. ஆர். எசு. திட்டத்திற்காக இந்தியாவுக்கான ஐக்கிய நாடுகளின் நிதியத்தின் நல்லெண்ண தூதராக இரானி இருந்தார்.[12][13] 2019ஆம் ஆண்டில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து அமேதியில் வெற்றி பெற்றதற்காக "களத்தினை மாற்றிய பெண்கள்" என்ற கருப்பொருளின் கீழ் பெமினாவின் அதிகாரப் பட்டியலில் இரானியின் பெயர் பட்டியலிடப்பட்டது.[14] புத்தகங்கள்இசுமிருதி இரானியின் முதல் நாவல் லால் சலாம், வெஸ்ட்லேண்ட் பதிப்பகத்தால் 2021இல் வெளியிடப்பட்டது.[15][16] இது ஏப்ரல் 2010இல் தண்டேவாடாவில் நடந்த மாவோயிஸ்ட் தாக்குதல் மற்றும் கிளர்ச்சிகளில் மத்திய காவல்துறையின் பங்கு குறித்து எழுதப்பட்டது.[17] தேர்தல் வரலாறு
மேற்சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia