இசுரேல் கெல்ஃபாண்ட்
இசுரேல் கெல்ஃபாண்ட் (Israel Gelfand, உருசியம்: Израиль Моисеевич Гельфанд, செப்டம்பர் 2 [யூ.நா. 20 ஆகஸ்ட்] 1913 – அக்டோபர் 5, 2009) என்பவர் சோவியத் மற்றும் அமெரிக்கக் கணிதவியலர். கணிதத்தில் குலக் கோட்பாடு, ஒப்புநிறுத்துக் கோட்பாடு (Representation Theory), நேரியல் இயற்கணிதம் ஆகியவற்றில் ஆழமாகப் பங்களித்த அறிஞர்.[1] இவர் சோவியத் ஒன்றியத்தின் உயர் பெருமையாகிய லெனின் புகழ்வரிசைப் பதக்கமும் (Order of Lenin), கணிதத்துறையின் உல்ஃப் பரிசையும் (Wolf Prize) பெற்றார். இங்கிலாந்தின் ராயல் சொசைட்டி ஃவெல்லோவாகவும் (அரச குமுக சிறப்பாளராகவும்) தேர்வு செய்யப்பெற்றார். மாசுக்கோ பல்கலைக்கழகத்தில் நெடிய ஒரு தலைமுறை முழுவதும் கணிதம் கற்பித்துக் கொண்டிருந்த இவர் தன்னுடைய 76 ஆம் அகவைக்கு சற்று முன்னர் ஐக்கிய அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தார். எம்.ஐ.டி-யிலும், ஆர்வர்டு பல்கலைக்கழகத்திலும் பணியாற்றிய பின்னர் நியூ செர்சியில் உள்ள ரட்கர்சு பல்கலைக்கழகத்தில் சிறப்புமிக்கப் பேராசிரியராகப் (Distinguished Professor) பணி ஏற்றார். ஆரம்ப வாழ்க்கைஅன்றைய உருசியப் பேரரசின் கீழிருந்த உக்ரைனில் யூதக் குடும்பத்தில் பிறந்தவர் கெல்ஃபாண்ட். பள்ளிப் படிப்பின் போதே கணிதத்தில் மிகத் திறமையுடையவராக இருந்த இசுரைல் உயர் பள்ளிக்குச் செல்லாமலேயே மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகத்தில் நேரடியாக பட்டப்பின் படிப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கு அவரது ஆய்வுநிலைப் படிப்புக்கு வழிகாட்டியாக இருந்தவர் பெரும்புகழுடைய ஆந்திரே கோல்மோகொரோவ் ஆவார். வேறு துறைகளில் பங்களிப்புதொகை வடிவவியல் (integral geometry) என்னும் துறையில் இவர் ஆற்றிய ஆய்வுகளும் அதன் முடிவுகளும் இன்று மருத்துவத்தில் உடல் உள்ளுறுப்புகளை நுண்படம் எடுக்கும் அணுக்காந்த ஒத்ததிர்வு படக் கலையிலும் (Magnetic Resonance Imaging, MRI), கணிவழி குறுக்குவெட்டு புதிர்க்கதிர்ப் படம் (CAT) எடுத்தல் முதலியவற்றிலும் பெரிதும் பயன்படுகின்றன. மேற்கோள்கள்
மேலும் சில ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia