ஐரோப்பாவின் நடுக்காலப் பகுதியில், தாழ்ந்த நாடுகள் பிரான்சுக்கும், புனித உரோமைப் பேரரசுக்கும் இடையே எல்லைப் பகுதியில் இருந்தன. இவற்றின் பல்வேறு பிராந்தியங்களும் 13-ஆம் நூற்றாண்டு அளவில் தனியான சுயாட்சியுடன் கூடிய நாடுகளாயின.[23]ஆப்சுபர்குகளின் கீழ், நெதர்லாந்து ஒரு தனி நிருவாகத்தின் கீழ் ஒருங்கிணைந்தது. 16-ஆம், 17-ஆம் நூற்றாண்டுகளில் வடக்கு நெதர்லாந்து எசுப்பானியாவிடம் இருந்து விடுதலை பெற்று இடச்சுக் குடியரசு ஆனது.[24] இருந்தாலும், டச்சு சமூகத்தின் உயர்ந்த சிறப்பு நகரமயமாக்கல் சிறப்பியல்பு ஒப்பீட்டளவில் முன்கூட்டியே இடம்பெற்றிருந்தது.[25] குடியரசுக் காலத்திலேயே முதல் கட்ட இடச்சுக் குடியேற்றங்கள் ஐரோப்பாவிற்கு வெளியே இடம்பெற்றன.
கிபி முதலாம் நூற்றாண்டுகளில் செருமானிக் மக்கள் தலைமைகள் இல்லாத பழங்குடி சமூகங்களை உருவாக்கினார்கள். போர்க் காலங்களில் மட்டும் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இவர்கள் செருமானிக்க புறச்சமய நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தனர். பொது செருமானிக் மொழியைப் பேசி வந்தார்கள். 500களில் மேற்கு நோக்கிய குடியேற்றம் நிறைவடைந்ததை அடுத்து, பெரும் கூட்டமைப்புகள் (பிராங்குகள், அலமான்னிகள், சாக்சன்கள்), உரோமைப் பேரரசு சரிய ஆரம்பித்த வேளையில், செருமானிக் சமூகங்களிடையே பல தொடர் மாற்றங்கள் ஏற்படலாயின. இவற்றில் முக்கியமாக கிறித்தவமயமாக்கம், மன்னராட்சியுடன் கூடிய புதிய அரசியல் அமைப்புகள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
மேலே விவரிக்கப்பட்ட பொது நிலைமை, பெரும்பாலான நவீன ஐரோப்பிய இனக்குழுக்கள் செருமானிய பழங்குடியினர்களிடமிருந்து தோற்றுவிக்கப்பட்டாலும், பெரும்பாலான பிரீசியர், செருமானியர், ஆங்கிலேயர் மற்றும் வடக்கு செருமானிக் (இசுக்காண்டிநேவிய) மக்கள் ஆகியவற்றுக்கு பொருந்தும். தாழ்ந்த நாடுகளில், பிராங்குகள், பல சிறிய பழங்குடி சமூகங்களாக உரோமைப் பேரரசின் வடமேற்கு மாகாணங்களைத் தாக்கத் தொடங்கியபோது இந்த கட்டம் தொடங்கியது. இறுதியாக, கிபி 358 இல், பிராங்குகளின் மூன்று முக்கிய பிரிவுகளில் ஒன்றான சேலிய பிராங்குகள்[28] தென் நிலங்களில் ஃபோடராட்டி என்ற பகுதிகளில் குடியேறினர்.[29]
↑இடச்சு புரட்டஸ்தாந்தினர் பெரும்பாலும் சீர்திருத்த சபையைச் சேர்ந்தவர்கள், இவர்களில் சிறுபான்மை லூதரனியரும் அடங்குவர்.
↑இடச்சு புரட்டஸ்தாந்தினர் பெரும்பாலும் சீர்திருத்த சபையைச் சேர்ந்தவர்கள், இவர்களில் சிறுபான்மை லூதரனியரும் அடங்குவர். இவர்களில் பெரும்பாலானோர் நெதர்லாந்து சீர்திருத்தத் திருச்சபயைச் சேர்ந்தவர்கள்.
மேற்கோள்கள்
↑1950களில் 350,000 பேர் நெதர்லாந்தில் இருந்து ஆத்திரேலியா, நியூசிலாந்து, கனடா, அமெரிக்கா, அர்கெந்தீனா, தென்னாப்பிரிக்கா நோக்கி குடிபெயர்ந்தனர். இவர்களில் ந்தில் ஒரு பங்கினரே நாடு திரும்பினர். 1950களில் இடச்சு குடியேறிகள் 300,000 ஆக இருந்தனர். 1960 இற்குப் பின் 1.6 மில்லியன் ஆகும். Autochtone population at 1 January 2006, Central Statistics Bureau, Integratiekaart 2006', (external link)பரணிடப்பட்டது 2016-05-06 at the வந்தவழி இயந்திரம்(டச்சு)
↑Netherlanders in America, an example of usage of the term Netherlanders, in the title of a 20th-century book.
↑Autochtone population at 1 January 2006, Central Statistics Bureau, Integratiekaart 2006, (external link)பரணிடப்பட்டது 2016-01-19 at the வந்தவழி இயந்திரம் This includes the Frisians as well.
↑Winkler Prins Geschiedenis der Nederlanden I (1977), p. 150; I.H. Gosses, Handboek tot de staatkundige geschiedenis der Nederlanden I (1974 [1959]), 84 ff.
↑16-ஆம் நூற்றாண்டில் இறுதியில் இருந்து இடச்சுக் குடியரசு சுதந்திர நாடாக இயங்கி வந்த போதிலும், அதன் உண்மையான விடுதலை 1648 மூன்ஸ்டர் உடன்பாட்டின் மூலமே வழங்கப்பட்டது.
↑D.J. Noordam, "Demografische ontwikkelingen in West-Europa van de vijftiende tot het einde van de achttiende eeuw", in H.A. Diederiks e.a., Van agrarische samenleving naar verzorgingsstaat (Leiden 1993), 35–64, esp. 40