இட்டிக்கல் அகரம்
இட்டிக்கல் அகரம் (Ittikkal agaram) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், கிருட்டிணகிரி ஊராட்சி ஒன்றியத்தின், இட்டிக்கல் அகரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.[1] அமைவிடம்இட்டிக்கல் அகரம் ஊரானது கிருஷ்ணகிரி- இராயக்கோட்டை சாலையில் கிருஷ்ணகிரியிலிருந்து சுமார் 14 கிலோமீட்டர் கடந்த பிறகு நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து செல்லும் கிராம சாலையில் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 297 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. பெருங்கற்காலச் சின்னங்கள்இட்டிக்கல் அகரத்தின் வடக்கு பகுதியில் காட்டுப் பகுதி உள்ளது. அங்கு பெருங்கற்காலத்தைச் சேர்ந்த 100 இக்கும் மேற்பட்ட கல்பதுக்கை ஈமச்சின்னங்கள் காணப்படுகின்றன.[2] இங்கு உள்ள கல்பதுக்கைகள் பல அளவுகளில் உள்ளன. இவை ஒரு மீட்டர் முதல் இரண்டு மீட்டர் வரை உயரம் கொண்டுள்ளன. இந்த கல்பதுக்கைகளின் நான்கு பக்கமும் உள்ள கற்பலகைகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கபட்டு ஸ்வஸ்திக அமைப்பில் நடப்பட்டுள்ளன. கல்பதுக்கையின் கிழக்குப் பக்கமாக வட்ட வடிவில் இடுதுளை செதுக்கபட்டுள்ளது. இந்தக் கல்பதுக்கைகளைச் சுற்றி இரண்டு கல்வட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உட்புறம் உள்ள கல்வட்டமானது அங்கு இயற்கையாக கிடைக்கும் கரடு முரடான கற்களைக் கொண்டு அமைக்கபட்டுள்ளது. வெளிப்பும் உள்ள கல்வட்டம் கற் பலகைகளைக் கொண்டு அமைக்கபட்டுள்ளது. [2] இங்கு சில கல்வட்டங்களில், கல்லறைக்கும் கல்வட்டத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் இயற்கையாக கிடைக்கும் சில சிறிய கற்களைக் குவித்ததுபோல் அடுக்கி உயரமாக அமைக்கபட்டுள்ளது.[2] ஊரில் உள்ள கோயில்கள்மேற்கோள்
|
Portal di Ensiklopedia Dunia