இந்தியவியல் தமிழியல் நிறுவனம் (கோலோன் பல்கலைக்கழகம்)இந்தியவியல் மற்றும் தமிழ்க்கல்வி நிறுவனம் (கொலோன் பல்கலைக்கழகம்) (இடாய்ச்சு மொழி: Instituts für Indologie und Tamil-Studien ஆங்கிலம்: Institute of Indology and Tamil Studies) என்பது ஜெர்மனியில் உள்ள கொலோன் பல்கலைக்கழகத்தில் உள்ள பல்கலைக் கழகக் கல்விப் பிரிவு ஆகும். தமிழ்க் கல்வி மற்றும் ஆய்வுப்பணிகளில் நீண்டகாலமாகப் பங்காற்றி வரும் இந்நிறுவனம், கொலோன் பல்கலைக்கழகத்தின் மறுசீரமைப்புக்குப் பிறகு 2012 முதல் தத்துவத்துறையின் தெற்கு மற்றும் தென்கிழக்காசிய கல்வி நிறுவனத்தின் (Instituts für Südasien- und Südostasien-Studien (SASOA)) ஒரு பகுதியாகச் செயல்படுகிறது [1]. எட்டாம் தமிழ் இணைய மாநாடு இதன் ஒத்துழைப்போடு ஜெர்மனியில் நடைபெற்றது. பணிகள்பல்துறை ஆராய்ச்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.[2] மொழியறிவியல்சமூகவியல்
மருத்துவம்கொலோன் பல்கலைக்கழகம இந்தியவியலில் ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவ ஆய்வுகள் நடைபெறுகின்றன. தமிழகத்தின் மற்றும் கேரளாவின் உள்நாட்டு அறிஞர்களின் ஒத்துழைப்புடன் ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்திடையே ஒப்பீடு செய்யப்படுகிறது. வெளி இணைப்புகள்
சான்றுகள் |
Portal di Ensiklopedia Dunia