இந்தியாவின் பண்பாட்டு மண்டலங்கள் என்பது இந்தியாவின் பல்வேறு பகுதிகளின் பண்பாட்டுப் பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் இந்திய அரசின்கலாச்சார அமைச்சகத்தால்[1] வரையறுக்கப்பட்ட ஏழு மண்டலங்களாகும்.[2] இந்த மண்டலங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு மண்டல மையம் தலைமை மையமாகச் செயல்படுகிறது.[3] பெரும்பாலான மண்டல மையங்கள் 1985ல் அப்போதைய இந்தியப் பிரதமர்ராஜீவ் காந்தியால் அறிவிக்கப்பட்டு 1986-87 காலகட்டத்தில் முறையாகச் செயல்படத் தொடங்கியது. "இந்தியக் கலாச்சாரத்தின் புராதன வேர்களை வலுப்படுத்துவதும், ஒருங்கிணைந்த தேசியக் கலாச்சாரத்தை மேம்படுத்துவதும் வளப்படுத்துவதும் " இவற்றின் குறிக்கோளாக உள்ளது.[4]
ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு மண்டலத் தலைமையகம் உள்ளது. இங்கு ஒரு மண்டலக் கலாச்சார மையம் நிறுவப்பட்டுள்ளது.[3] பல மாநிலங்கள் பல மண்டலங்களில் உறுப்பினர்களாக உள்ளன. ஆனால் மண்டலப் பிரிவுகளில் எந்த மாநில உட்பிரிவுகளும் பயன்படுத்தப்படவில்லை. இவை பொறுப்பேற்றுள்ள மண்டலங்களின் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதோடு, ஒவ்வொரு மண்டல மையமும் செயல்பாடுகளை ஏற்பாடு செய்வதன் மூலமும், பிற மண்டலங்களிலிருந்து கலைஞர்களை அழைப்பதன் மூலமும் இந்தியாவின் பிற கலாச்சாரங்களை ஊக்குவிப்பதற்கும் வெளிப்படுத்துவதற்கும் பாலமாகச் செயல்படுகிறது.
↑West Zone Culture Center, West Zone Culture Centre, retrieved 2010-12-15, ... West Zone Cultural Centre (WZCC) with its headquarters at Udaipur is one of the seven Zonal Cultural Centres set up during 1986–87, under the direct initiative of the Ministry of Human Resource Development, Govt. of India ...
↑ 3.03.1South Zone Culture Center: Other Zones, South Zone Culture Centre, archived from the original on 2011-03-03, retrieved 2010-12-15, ... North East Zone Cultural Centre – Nagaland – Assam, Tripura, Manipur, Arunachal Pradesh, Nagaland & Meghalaya ...
↑North Zone Culture Center, North Zone Culture Centre, retrieved 2010-12-15, ... Rajiv Gandhi inaugurated the North Zone Cultural Center on 6th Nov. 1985 the then Prime Minister of India ... one of the seven cultural centers established in the country to strengthen the ancient roots of Indian Culture and evolve and enrich composite National Culture ... Punjab, Haryana, Himachal Pradesh, Jammu & Kashmir, Uttrakhand, Rajasthan & Chandigarh (U.T.) ...