இந்தியாவும் கூட்டுசேரா இயக்கமும்
புதியதாக விடுதலை பெற்ற மற்றும் குடிமைப்பட்ட நாடுகள் பன்னாட்டு பன்முகப்பட்டகூட்டுசேரா இயக்கத்தை உருவாக்கிட இந்தியா முதன்மை பங்களித்தது. கூட்டுசேரா இயக்கத்தின் துவக்கங்கள்அணி சேராமை இந்தியாவின் குடிமைப்பட்ட கால பட்டறிவினாலும் வன்முறையற்ற விடுதலை இயக்கத்தின் தொடர்ச்சியாகவும் அமைந்தது; பன்னாட்டளவில் பனிப்போரால் பாதிக்கப்பட்டிருந்த உலக சூழலில் தனது எதிர்காலத்தை தானே முடிவெடுக்கும் திண்மை உடையதாக இருந்தது. மேற்கத்திய முதலாளித்துவத்திற்கும் கிழக்கத்திய பொதுவுடமைக்கும் இடைப்பட்ட நிலையை விரும்பியது. ஜவஹர்லால் நேருவும் அவருக்குப் பின் வந்தோரும் பன்னாட்டளவில் எந்தவொரு அதிகார மையத்துடனும் அணி சேராது, முக்கியமாக ஐக்கிய அமெரிக்காவுடனும் சோவியத் உருசியாவுடனும், சுதந்தரமாக செயல்பட கூட்டுசேராக் கொள்கையை பரிந்துரைத்தனர். பன்னாட்டுப் பிணக்குகளைத் தீர்க்க வன்முறை தவிர்த்தலையும் பன்னாட்டு கூட்டுறவையும் பரிந்தனர். 1940களிலிருந்தே இந்திய வெளியுறவுக் கொள்கைகளின் சிறப்பியல்பாக அணி சேராமை இருந்து வந்துள்ளது.
ஜவஹர்லால் நேருவின் கருத்துக்கள் புதியதாக விடுதலை பெற்ற நாடுகளிடையே பன்னாட்டளவில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்தது. கூட்டுசேரா இயக்கத்தின் மூலம் மூன்றாம் உலகின் புதிய தலைமையாக இந்தியா தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia