இந்திய சோவியத் நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம்இந்திய சோவியத் அமைதி, நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் என்பது இந்தியா மற்றும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையே ஆகத்து 1971ஆம் ஆண்டு கையொப்பமிடப்பட்ட ஒரு ஒப்பந்தமாகும். பனிப் போரின் போது[1] அணிசேரா இயக்கத்தை ஆதரித்த இந்தியாவின் முந்தைய நிலையிலிருந்து குறிப்பிடத்தக்க அளவுக்கு வேறுபட்டு இந்த ஒப்பந்தம் 1971ஆம் ஆண்டு இந்திய பாக்கித்தான் போரிலும் குறிப்பிடத்தக்க காரணியாக இருந்தது. சீனா மற்றும் ஐக்கிய அமெரிக்காவுடன்[2][3] பாக்கித்தானின் வளர்ந்து வந்த உறவின் காரணமாக இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. 1971 வங்காளதேச சுதந்திரப் போரில் இந்த ஒப்பந்தம் குறிப்பிடத்தக்களவுக்கு பங்காற்றியது.[4] இந்த ஒப்பந்தத்தின் கால அளவானது 20 ஆண்டுகள் ஆகும். 1991ஆம் ஆண்டு ஆகத்து 8ஆம் நாள் இந்த ஒப்பந்தம் மேலும் 20 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது. சோவியத் ஒன்றியம் பிரிக்கப்பட்டதற்கு பிறகு இந்த ஒப்பந்தத்திற்கு பதில் ஒப்பந்தமாக 1993ஆம் ஆண்டு சனவரி மாதம் புது தில்லிக்கு வருகை புரிந்த அதிபர் எல்ட்சின் இந்திய உருசிய நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். உசாத்துணை
|
Portal di Ensiklopedia Dunia