இந்திய வெற்றி.[1][2][3] கிழக்குப் பகுதி: பாக்கிஸ்தான் படைகள் சரண். மேற்குப் பகுதி: நிபந்தனையற்ற போர் நிறுத்தம்.[4]
நிலப்பகுதி மாற்றங்கள்
* கிழக்கு பாக்கிஸ்தானிலிருந்து வங்காளதேசம் விடுதலை
இந்தியப்படைகள் கிட்டத்தட்ட 5,795 சதுர மைல்கள் (15,010 km2) நிலத்தை மேற்கில் கைப்பற்றி சிம்லா ஒப்பந்தம் அடிப்படையில் நல்லெண்ண அடிப்படையில் திருப்பிக் கொடுத்தனர்.[5][6][7]
அதிபர் யகாயா கான் பிரதமர் நூருல் அமின் அப்துல் கமிட் கான் நியாசி கசன் கான் டிக்கா கான் அப்துல் அலி சரிப் பற்றிக் கலகான் பர்மன் அலி யம்சத் யன்யூலா † முசபர் கசன் அப்துல் ரகிம்
1971 இந்திய-பாக்கிஸ்தான் போர் (Indo-Pakistani War of 1971) என்பது 1971 இல் வங்காளதேச விடுதலைப் போர் காலத்தில் இந்தியாவுக்கும்பாக்கித்தான்னுக்கும் இடையில் நடைபெற நேரடிச் சண்டையைக் குறிக்கின்றது. 3 திசம்பர் 1971 அன்று 11 இந்திய வான்படை முகாம்களின் மீது பாக்கித்தான் வலிந்த தாக்குதலை மேற்கொண்டதும் இந்தியா கிழக்கு பாக்கிஸ்தான் விடுதலைப் போருக்குள் நுழைந்தது.[21][22] இப்போர் 13 நாட்கள் நீடித்து, வரலாற்றில் மிகவும் குறுகிய காலம் நடைபெற்ற போராக இடம்பிடித்தது.[23][24]
இராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற லோங்கேவாலா சண்டையில் பாகித்தான் இராணுவம் 30 முதல் 40 போர் டாங்கிகளுடன் 2,000–3,000 வரையிலான படையினர் போரிட்டனர். இந்திய வான்படையின் போர் வானூர்திகள் பாகிஸ்தான் போர் டாங்கிகளை தாக்கி அழித்தன. போரின் முடிவில் பாகித்தான் தோற்றது. பாகித்தான் இராணுவம் தரப்பில் 200 வீரர்கள் கொல்லப்பட்டனர், 36 போர் டாங்கிகள் அழிக்கப்பட்டது மற்றும் 500+ கவச வாகனங்கள் அழிக்கப்பட்டது.[25]
இப்போரில் வீர தீர சாகசங்கள் செய்த மேஜர் குல்தீப் சிங் சந்த்புரிக்குமகா வீர சக்கரம் வழங்கப்பட்டது.
வெளிநாட்டு எதிர்வினை மற்றும் ஈடுபாடு
சோவியத் ஒன்றியம் மற்றும் ஐக்கிய அமெரிக்கா
தந்தி
இந்தியாவுக்கு எதிராக ஐக்கிய அமெரிக்கா அல்லது சீனா நடவடிக்கைகளை மேற்கொண்டால் சோவியத் ஒன்றியம் பதில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என இந்தியாவிற்குச் சோவியத் ஒன்றியம் உறுதியளித்தது. இந்த உறுதி 1971 ஆகத்து மாதம் கையொப்பமிடப்பட்ட இந்திய சோவியத் நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டது.[26]
அமெரிக்க ஐக்கிய நாடுகள் பாக்கித்தான் பக்கம் நின்றது. பாக்கித்தானுக்கு அரசியல், பொருளாதார மற்றும் பொருளுதவி செய்தது. வங்காளதேச உள்நாட்டுப் போரில் தலையிட மறுத்தது. பாக்கித்தான் மீது இந்தியா படையெடுத்தால் இந்தியத் துணைக் கண்டத்தில் சோவியத் ஆதிக்கம் அதிகமாகும் என அமெரிக்க அதிபர் நிக்சன் அச்சம் கொண்டார். உலக அரங்கில் ஐக்கிய அமெரிக்காவின் நிலை மற்றும் இப்பிராந்தியத்தில் அமெரிக்காவின் புதிய கூட்டாளியான சீனாவின் நிலையையும் அது பாதிக்கும் என அவர் கருதினார். பாக்கிஸ்தானுக்கு இராணுவ உதவிகளை அளிக்க ஈரானை நிக்சன் ஊக்குவித்தார்.[27] கிழக்குப் பாக்கித்தானில் பாக்கித்தானிய இராணுவம் இனப்படுகொலையில் ஈடுபடுவதைப் பற்றி அமெரிக்க அதிகாரிகள் அளித்த தகவல்களையும் நிக்சன் பொருட்படுத்தவில்லை.[28][29][30] இந்தியா படைகளைப் பின்வாங்க வேண்டுமென நிக்சன் மற்றும் கிசிங்கர் சோவியத்துகளிடம் அதிக அழுத்தத்தைக் கொடுத்தனர்.[31]
கிழக்கில் பாக்கித்தானின் தோல்வி உறுதி என்று தெரிந்தபோது நிக்சன் வானூர்தி தாங்கிக் கப்பல் ஒன்றை வங்காள விரிகுடாவில் போருக்கு ஆயத்தமான நிலையில் வரவழைத்தார்.[32] 11 திசம்பர் 1971ஆம் ஆண்டு அந்தக் கப்பல் மற்றும் அதன் துணைக் கப்பல்கள் வங்காள விரிகுடாவை வந்தடைந்தன. ஐக்கிய இராச்சியமும் அதன் பங்குக்கு ஒரு வானூர்தி தாங்கிக் கப்பலைக் கொண்ட கப்பல்களின் குழுவை அனுப்பி வைத்தது.[26][33]
6 மற்றும் 13 திசம்பர் அன்று, சோவியத் கப்பல் படையானது விளாதிவசுத்தோக்கிலிருந்து இரண்டு கப்பல் குழுக்களை அனுப்பியது. அந்தக் கப்பல் குழுவானது இந்திய பெருங்கடலில் 18 திசம்பர் 1971 முதல் 7 சனவரி 1972 வரை ஐக்கிய அமெரிக்காவின் கப்பல் குழுவைப் பின்தொடர்ந்தது. இந்திய பெருங்கடலில் ஐக்கிய அமெரிக்காவின் கப்பல் குழுவால் ஏற்படுத்தப்பட்ட அச்சுறுத்தலை நீக்குவதற்காக சோவியத்து ஒன்றியம் ஒரு அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பலையும் கொண்டுவந்தது.[34][35]
↑Kemp, Geoffrey (2010). The East Moves West India, China, and Asia's Growing Presence in the Middle East. Brookings Institution Press. p. 52. ISBN978-0-8157-0388-4. However, India's decisive victory over Pakistan in 1971 led the Shah to pursue closer relations with India
↑Leonard, Thomas. Encyclopedia of the developing world, Volume 1. Taylor & Francis, 2006. ISBN978-0-415-97662-6.
↑The Encyclopedia of 20th Century Air Warfare, edited by Chris Bishop (Amber publishing 1997, republished 2004 pages 384–387 பன்னாட்டுத் தரப்புத்தக எண்1-904687-26-1)
Raja, Dewan Mohammad Tasawwar (2010). O General My General (Life and Works of General M A G Osmany). The Osmany Memorial Trust, Dhaka, Bangladesh. ISBN978-984-8866-18-4.