இந்திய தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகம்
இந்திய தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகம் (ஆங்கிலம்:National Film Development Corporation of India (NFDC).) இது ஒரு அகில இந்திய அரசு சார்ந்த இந்தியத் திரைப்படம் தயாரிப்பு நிறுவனம் ஆகும். மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு 1975 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.[1] இது இந்தியாவின் மிகச் சிறந்த திரைப்படத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இந்திய அரசால் நிறுவப்பட்ட நிறுவனமாகும். வரலாறுஇந்த நிறுவனம் 1975ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.[2] கடந்த பல்லாண்டுகளில் இந்தியத் தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகம் இந்தியத் திரைப்படத்துறையின் வளர்ச்சிக்காக பல்வகை சேவைகளை வழங்கி வருகிறது; குறிப்பாக 1970களில் இந்தியாவில் நிலவிய மாறுபட்ட புத்தலை திரைப்படங்களுக்கு ஊக்குவிக்கும் வண்ணம் நிதி உதவி மற்றும் பல வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தது.[3] இந்த நிறுவனமும் இதற்கு முன்னர் இருந்த திரைப்பட நிதிக் கழகமும் 300 திரைப்படங்களுக்கும் மேலாக நிதி உதவி வழங்கியும் தயாரித்தும் உள்ளன. இந்திய மொழிகளில் தயாரிக்கப்பட்ட இந்தத் திரைப்படங்கள் தேசிய அளவிலும் பன்னாட்டு அளவிலும் பல விருதுகளைப் பெற்றுள்ளன. அண்மையில் காசுமீரியில் எடுக்கப்பட்ட மூன்றாவதுத் திரைப்படமான Bub ('தந்தை') இந்நிறுவனத்தின் உதவியுடன் தயாரிக்கப்பட்டதாகும். இந்தியத் தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் தற்போதையத் தலைவராக ரமேஷ் சிப்பி உள்ளார்; இதற்கு முன்னதாக ஓம் பூரி இருந்தார். 1983இல் எட்டு அகாதமி விருதுகள் பெற்ற காந்தியின் தயாரிப்பில் இந்தியத் தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகமும் முக்கியப் பங்காற்றி உள்ளது. தயாரித்த திரைப்படங்கள்இந்தியாவின் பல்வேறு மொழி, கலாசார அடிப்படையில் இது வரையில் இந்த நிறுவனம் முன்னூறுக்கும் அதிகமான திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் சில மிகப் பெரிய விவாதங்களையும் தேசிய விருதுகளையும் பெற்றிருக்கின்றன.[4] அவற்றில் சில அட்டவணையில்:-
ஆதாரங்கள்
வெளியிணைப்பு |
Portal di Ensiklopedia Dunia