காந்தி (திரைப்படம்)
காந்தி திரைப்படம் (Gandhi (film)) 1982 ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் வெளிவந்த வரலாற்றுத் திரைப்படமாகும். காந்தியின் வரலாற்றினை மையமாகக் கொண்டு வெளிவந்த இத்திரைப்படம் 1982 ஆம் ஆண்டில் 8 ஆசுகார் விருதுகளைப் பெற்றது. காந்தி திரைப்படம் ரிச்சர்ட் ஆட்டன்பரோவுக்கு உலகளாவிய புகழைத் தேடித்தந்தது. ஆஸ்கார் விருது விழாவில் சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த திரைப்படத்திற்கான விருதுகளை வாங்க அவர் மேடைக்குச் சென்றபோது பல மேற்கத்தியர்கள் ரசிக்கும்படியாக ரகுபதி ராகவ ராஜாராம் இசைக்கப்பட்டது. மேடையில் அவர் அப்போது கூறியதை எவரும் மறக்க முடியாது. "அன்பு நண்பர்களே, உண்மையில் இந்த விருதுகள் எனக்கோ, பென் கிங்ஸ்லிக்கோ அல்லது தொழில்நுட்பத்திற்காக வென்றவர்களுக்கோ அல்ல. இந்த விருதுகள் மூலமாக நீங்கள் மகாத்மா காந்திக்கும் நாம் அனைவரும் அமைதியாகவும் வாழ வேண்டும் என்ற அவருடைய குறிக்கோளுக்கும் மரியாதை செலுத்துகிறோம்".[1] நடிகர்கள்மேற்கோள்கள்
புற இணைப்புகள்![]() விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: காந்தி (திரைப்படம்)
|
Portal di Ensiklopedia Dunia