திட்டப் பெயர்
|
எதிர்பார்க்கும் தொடக்கம்
|
விண்கலம்
|
விவரங்கள்
|
சந்திரயான்-3
|
14 ஜூலை 2023 02:35 இசீநே, 9:05 ( ஒபொநே) (ஏவப்பட்டுள்ளது)
|
நிலாத் தரையிறங்கி, தரையூர்தி, செலுத்து பெட்டகம்
|
23 ஆகத்து 2023 மாலை ஒ6:04 இ சீ நே அமையத்தில் தரையிறங்கி நிலாத் தரையில் இறங்கியது. நிலாத் தூசு படிவு நின்றதும் தரையூர்தி சாய்தள வழியாக ஊர்ந்து மெல்லமெல்ல தரை இறங்கியது.
|
ஆதித்யா-எல்-1
|
ஆகத்து 2023 (எதிர்பார்க்கப்படுகிறது)
|
சூரிய கண்காணிப்பு
|
ஆதித்யா-எல்-1 என்பது சூரிய ஒளிமுட்டுப்புறணி, வண்ணக்கோளம் அருகே புற ஊதாக் கருவியைப் பயன்படுத்திச் சூரிய ஒளிமுகட்டைப் படிக்கும் முதல் இந்தியக் கண்காணிப்பு வகைப் திட்டப்பணியாகும். எக்சுக்கதிர் கதிர்நிரல்பதிவுக் கருவிகள் சூரியத் தணல்வீச்சின் கதிர்நிரலை வழங்கும் அதே வேளையில் பிற அறிவியல் கருவிகள் சூரியனில் இருந்து புவிக்கு செல்லும்போது சூரிய நிகழ்வுகளை கவனிக்கிறது.[8]
|
எக்சுக் கதிர் முனைமை அளவி செயற்கைக்கோள்
|
2023 இரண்டாம் காலாண்டு
|
விண்வெளி ஆய்வகம்
|
எக்சுக் கதிர் முனைமை அளவி செயற்கைக்கோள் (-ray Polarimeter Satellite) ( எக்சுப்போசாட் ) என்பது அண்டவெளி எக்சுக்கதிர்களின் முனைமையை ஆய்வு செய்வதற்காக இசுரோ திட்டமிடப்பட்ட விண்வெளிக் கண்காணிப்புத் திட்டம் ஆகும். இது 2023 இல் ஒரு சிறிய செயற்கைக்கோள் ஏவூர்தியில் (SSLV) வழி தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது; குறைந்தது ஐந்து ஆண்டுகள் இக்கலம் தன் சேவையை வழங்கும். துடிவிண்மீன்கள், கருந்துளை, எக்சுக்கதிர் இரும விண்மீன்கள்கள், செயல் முனைவான பால்வெளிக் கொத்துக் கருக்கள், வெப்பமற்ற மீயொளிர் விண்மீன் வெடிப்புகளின் எச்சங்கள் உட்பட புடவியில் அறியப்பட்ட 50 பொலிவுமிகும் வான்பொருட்களை எக்சுப்போசாட்(XPoSat) விண்கலம் ஆய்வு செய்யும்.
|
ககன்யான் 1
|
2023 ந்டுவில்
|
ஆளில்லாத விண்கலப் பயண ஆய்வு
|
ககன்யான் ("வட்டணை ஊர்தி") என்பது இந்திய மனித விண்வெளிப் பயணத் திட்டத்தின் அடிப்படையாகக் கருதப்படும் மாந்தக் குழுவுடனான வட்டணை விண்கலம் ( இசுரோ மற்றும் எச்ஏஎல் இணைந்து உருவாக்கப்பட்டது). விண்கலம் மூன்று பேரை ஏற்றிச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் திட்டமிடப்பட்ட மேம்படுத்தப்பட்ட வகைக்கலம் சந்திப்பு மற்றும் நறுக்குதல் திறன் கொண்டதாக இருக்கும். தொடக்கக் குழுப் பயணப் பணிக்கு முந்தைய இரண்டு ஊர்தி வெள்ளோட்டங்களில் இதுவே முதல் முறையாகும்.
|
ககன்யான் 2
|
2023–2024
|
ஆளில்லாத விண்கலப் பயண ஆய்வு
|
தொடக்கக் குழுப் பயணப் பணிக்கு முந்தைய இரண்டு ஊர்தி வெள்ளோட்டங்களில் இது இரண்டாவதாகும்.
|
நிசார்
|
ஜனவரி 2024
|
SAR செயற்கைக்கோள்
|
நாசா-இசுரோ செயற்கைத் துளை வீவாணி (NISAR) திட்டப்பணி என்பது நாசாவும் இசுரோவும் இணைந்த ஒரு கூட்டுப்பணித் திட்டமாகும். இது தொலைநிலை உணர்தலுக்குப் பயன்படுத்தப்படும் இரட்டை அலைவெண் செயற்கைத் துளை வீவாணி செயற்கைக்கோளை உருவாக்கி ஏவுகிறது. இது முதலாம் இரட்டைக்கற்றை வீவாணி படிமச் செயற்கைக்கோள் என்பது குறிப்பிடத்தக்கது.[9]
|
சுக்ராயன்-1
|
டிசம்பர் 2024
|
வெள்ளி சுற்றுகலன் திட்டம்
|
வெள்ளி சுற்றுகலன் திட்டம் என்பது வெள்ளி வளிமண்டலத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் திட்டமிடப்பட்ட வெள்ளி சுற்றுகலன் ஆகும்.
|
மங்கள்யான் 2
|
2024
|
செவ்வாய் சுற்றுகலன்
|
மங்கள்யான் 2 (மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன் 2) ( எம்ஓஎம் ) என்பது 2021-2022 காலக்கட்டத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் செவ்வாய்க்கு ஏவுவதற்கு திட்டமிடப்பட்ட இந்தியாவின் இரண்டாம் கோள்களுக்கு இடையேயான முனைவு ஆகும். இசுரோ தலைவர் கே. சிவன் ஒரு நேர்காணலில் கூறியது போல், இது ஒரு வட்டணைக்கலனைக் கொண்டிருக்கும், ஆனாலும், இதில் ஒரு தரையிறங்கியும் தரையூர்தியும் இருக்கவும் வாய்ப்பு இருந்தது; ஆனால் பின்னர் அது ஒரு வட்டணைக்கலத் திட்டம் மட்டுமே என்று முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டது [10]
|
ககன்யான் 3
|
2025 [11]
|
குழுப்பயண விண்கலம்
|
முதலில் ககன்யான் பணி, குழுப்பயண விண்கலம் அனுப்பும் நோக்கில் உருவாக்கப்பட்டது. இது வெற்றி பெற்றால், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் உலகின் நான்காவது நாடாக (அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் மற்றும் சீனாவுக்குப் பிறகு) இந்தியா அமையும்.
|
நிலா முனை ஆய்வுப் பணி
|
2025
|
நிலாத் தரையிறங்கியும் தரையூர்தியும்
|
நிலா முனை ஆய்வுப் பணி என்பது 2025 ஆம் ஆண்டில் நிலவின் தென்முனைப் பகுதியை ஆராய்வதற்காக ஜாக்சா, இசுரோ இணைந்து முன்வைத்த திட்டப் பணியாகும். நிதி திட்டமிடல் பற்றிய கருத்துருவம் இன்னும் முறையாக முன்மொழியப்படவில்லை.
|
சந்திரயான்-5
|
2025-30
|
நிலாத் தரையிறங்கி அடிப்படையிலான சுழல்துளைப்புக் கருவி உள்ள கல அமைப்பு
|
களத்தில் நிலா மண்படிவப் பதக்கூறு ஆய்வு
|
ஆஸ்ட்ரோசாட்-2
|
TBD
|
விண்வெளித் தொலைநோக்கி
|
ஆசுட்டிரோசாட்-2 என்பது இந்தியாவின் இரண்டாவது பல அலைநீள விண்வெளித் தொலைநோக்கி ஆகும், இது தற்போதைய ஆஸ்ட்ரோசாட்-1 நோக்கீட்டகத்தின் வாரிசாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் முன்மொழியப்பட்டது. வானியல் மற்றும் வானியற்பியலுக்கான முன்வரைவுகள், கருவிகளை மேம்படுத்துவதற்கான முன்மொழிவுகளை இந்திய அற்வியலாளர்களிடமிருந்து கோரும் அறிவிப்பை பிப்ரவரி 2018 இல் இசுரோ வெளியிட்டது.
|