நிலாத் தேட்டம்![]() நிலாத் தட்டம் (exploration of the Moon) சோவியத் ஒன்றியம் ஏவிய உலூனா-2 விண்கலம் நிலாத் தரையின் மேற்பரப்பில் சென்று 1959 செடம்பர் 14 இல் மொத்தியதும் தொடங்கியது. அதற்கு முன்பான நிலா ஆய்வு புவியில் இருந்து மேற்கொண்ட நோக்கீடுகளாகவே இருந்தது. ஒளியியல் தொலைநோக்கியின் புதுமைப்புனனைவு நிலா நோக்கிடுகளின் பாய்ச்சலையே உருவாக்கியது. கலீலியோ கலிலி தான் முதலில் வானியலில் தொலைநோக்கியைப் பயன்படுத்தினார் என பொதுவாகக் கூறப்படுகிறது; அவர் தானே உருவாக்கிய தொலைநோக்கியைப் பயன்படுத்தி நிலாத் தரை மலைகளையும் மொத்தல் குழிகளையும் நோக்கினார். இவையே நிலா சார்ந்த முதல் கருவிவழி நோக்கீடுகளாகும். நாசாவின் அப்பொல்லோ திட்டம் வெற்றிகரமாக மந்தரை நிலாவில் ஆறுமுறை இறங்கவைத்த திட்டமாகும். முதல் முறையாக நிலாவில் அப்பொல்லோ-11 நிலாவில் இரு விண்பயணிகளுடன் இறங்கியது. அவர்கள் புசு ஆல்டிரினும் நீல் ஆர்ம்சுட்டிராங்கும் அவர்கள் நிலாவில் அறிவியல் கருவிகளை இறக்கிவிட்டு நிலாப் பதக்கூறுகளைப் புவிக்கு கொணர்ந்தனர். சீனா 2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தன் சாங்கே 4 எந்திரன்கை விண்கலத்தின் யுது-2 எந்திரன் தரையூர்தி மெதுவாகத் நிலாத் தரையில் இறக்கியது. விண்வெளிப் பறப்புக்கு முன்சூரியனும் நிலாவும் இரண்டுமே மாபெரும் கோள வடிவப் பாறைகள் எனவும் நிலா சூரிய ஒளியைத் தான் தெறிக்கிறது எனவும் கூறிய பண்டைய கிரேக்க மெய்யியலாளரான அனாக்சகோரசு வானகம் பற்றிய தன் கருத்துகளுக்காகக் கைது செய்யப்பட்டு சிறையில் இடப்பட்டார்.[1] ஏன் பேரரசின் சீன மெய்யியலாளர்கள் நிலா ஆற்றல் அளவு குவிக்குச் சமமாகும் எனவும் நிலா ஒளி சூரிய ஒளியின் தெறிப்பே எனவும் நம்பினர்.[2]கணிதவியலாளரும் கணிய(சோதிட)வியலாளருமான யிங் பாங் நிலாவின் கோள இயல்பைப் பற்றிக் கணித்துள்ளார்.[2] கிபி ஐந்தாம் நூற்றாண்டு வானியலாளரான ஆரியபட்டர் தன் ஆரியபாட்டியம் நூலின்கண் சூரிய ஒளியால் தான் நிலா சுடர்கிறது எனக் கூறியுள்ளார்.[3] ![]() ![]() ![]() ![]() விண்வெளிப் போட்டிகாண்க, விண்வெளிப் போட்டி, நிலாவில் தரையிறக்கம், அப்பல்லோ திட்டம் சோவியத் குழுவுள்ள நிலா நிகழ்ச்சிநிரல்கள் பனிப்போர் விளைவாக சோவியத் ஒன்றியத்துக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் விண்வெளிப் போட்டி நிலாப்போட்டியாக நிலாவைக் களமாகக் கொண்டு முடுக்கப்பட்டது. இது பல அறிவியல் முன்மைகளைத் தோற்றுவித்தது. சோவியத் ஒன்றியம் காணாத உலகை ஒளிப்படம் (நிலாவின் அப்பாற்பக்கப் படம்,1959) எடுத்தது. அமெரிக்கா 1969 இல் நிலாவில் மாந்தரைத் தரையிறங்க வைத்தது. இது 20 ஆம் நூற்றாண்டின் ஒப்பற்ற நிகழ்வாகவும் ஏன், பொதுவாக, மாந்தரின வரலாற்றின் ஒப்பற்ற நிகழ்வாகியது. ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() முதன்முதலில் நிலாவில் 1959 ஜனவரி 4 அன்று பறந்து சென்ற செயற்கைப்பொருள் சோவியத் ஒன்றியத்தின் ஆளில்லாத ஆய்கலம் உலூனா 1. சூரியனைச் சுற்றிச் [[சூரியமைய வட்டணையில் பரந்ததும் இந்த விண்கலமே.[5] இது நிலாத் தரையில் மொத்த வடிவமைக்கப்பட்டது எனச் சிலரே அறிவர். நிலா மேற்பரப்பில் மொத்திய ஆய்கலம் சோவியத் ஒன்றியத்தின் உலூனா 2 ஆய்கலமாகும். இது1959, செப்டம்பர் 14 அன்று 21:02:24 ஒபொநே நேரத்தில் வன் தரையிறக்க முறையில் மொத்தியதுSeptember 14, 1959, at 21:02:24 UTC. நிலாவின் அப்பாற்பக்கம் முதலில் ஒளிப்படம் 1959, அக்தோபர் 7 அன்று உலூனா 3 ஆய்கலத்தால் எடுக்கப்பட்டது. இன்றைய தரத்தில் இல்லையென்றாலும் இது நிலாவின் அப்பாற்பக்கத்தில் நாம் காணும் நிலாப் பக்கத்தில் எரிமலையை உருவாக்கவல்ல பாசால்ட் சமவெளி முற்றிலும் இல்லையெனக் காட்டியது. நிலாவில் முதல் அமெரிக்க ஆய்கலம் [[பயோனீர் 4 1959, மார்ச்சு 4 அன்று பரந்து சென்றது. இது உலூனா 1 க்குப் பிறகு குறுகிய கால இடைவிளியில் நிகழ்ந்தது. நிலாவுக்கு ஏவ முணைந்து எட்டு அமெரிக்க ஆய்கலங்களில் இதுதான் முதல் வெற்றியாக வாய்த்தது.[6] சோவியத் ஒன்றிய வெற்றிகளைப் புறங்கான, அமெரிக்க குடியரசு தலவர் ஜான் எஃப். கென்னடி பேராயத்தில் வற்புறுத்திய உடனடித் தேசியத் தேவைகள் குறித்த சிறப்புத் தகவலில் நிலாவில் தரையிறங்கல் குறித்து அறிவித்தார். 1990 க்குப் பிறகுதிட்டமிட்ட வணிக முனைவுகள்எதிர்காலத் திட்டங்கள்காண்க, நிலாத் திட்டங்களின் பட்டியல் மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia