இந்திரா சௌந்தர்ராஜன் (13 நவம்பர் 1958 - 10 நவம்பர் 2024) ஒரு தமிழக எழுத்தாளர். இவரது இயற்பெயர் பி சௌந்தர்ராஜன். சிறுகதைகள், நாவல்கள், தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைக்கதைகள் எழுதிவரும் இவர் தமிழ் வாசகர்களால் நன்கு அறியப்பட்டவர்.[1][2] தனது 65 ஆவது வயதில் மதுரை டி. வி. எஸ். நகரில் காலமானார்.[3]
இவர் தென்னிந்திய இந்துமத பாரம்பரியம் மற்றும் புராண இதிகாசங்களைக் கலந்து எழுதுவதில் வல்லவர். இவருடைய கதைகள் பொதுவாக அமானுட நிகழ்வு, தெய்வீக தலையீடு, மறுபிறவி, பேய்கள் போன்ற விஷயங்களை உள்ளடக்கியிருக்கும். இவர் கதைகள் தமிழ் நாட்டின் பல பகுதிகளில் வாழும் மக்கள் தெரிவித்த உண்மை நிகழ்வுகளின் அடிப்படையிலும் அமைந்துள்ளன.[4]
இவருடைய இரண்டு அல்லது மூன்று புதினங்களாவது ஒவ்வொரு மாதமும் கிரைம் ஸ்டோரி மற்றும் இன்றைய கிரைம் நியூஸ் போன்ற பதிப்பாளர்களால் வெளியிடப்படுகின்றன.
தேர்ந்தெடுத்த படைப்புகள்
கதை
எங்கே என் கண்ணன்
கல்லுக்குள் புகுந்த உயிர்
நீலக்கல் மோதிரம்
சோமஜாfலம்
உன்னைக் கைவிடமாட்டேன்
நந்தி ரகசியம்
சதியை சந்திப்போம்
தேவர் கோயில் ரோஜா
மாய விழிகள்
மாயமாகப் போகிறாள்
துள்ளி வருகுது
நாக பஞ்சமி
கண் சிமிட்டும் இரத்தினக்கல்
தங்கக் காடு
காற்று காற்று உயிர்
தோண்டத் தோண்டத் தங்கம்
அஞ்சு வழி மூணு வாசல்
உஷ்
மகாதேவ ரகசியம்
சுற்றி சுற்றி வருவேன்
காற்றாய் வருவேன்
கோட்டைப்புரத்து வீடு
ரகசியமாய் ஒரு ரகசியம்
சிவஜெயம்
திட்டி வாசல் மர்மம்
வைரபொம்மை
காதல் குத்தவாளி
கிருஷ்ண தந்திரம்
பெண்மனம்
பேனா உளவாளி
ஜீவா என் ஜீவா
சொர்ண ரேகை
விடாது கருப்பு
இயந்திர பார்வை
வானத்து மனிதர்கள்
ருத்ர வீணை பகுதி 1 ,2 ,3 & 4
விக்ரமா விக்ரமா பகுதி 1 & 2
கன்னிகள் ஏழுபேர்
ஆயிரம் அரிவாள் கோட்டை
தேடாதே தொலைந்து போவாய் பகுதி 1 & 2
சிவமயம் பகுதி 1 & 2
விரல் மந்திரா
நான் ராமசேஷன் வந்திருக்கேன்
ஒளிவதற்கு இடமில்லை
அது மட்டும் ரகசியம்
பல்லவன் பாண்டியன் பாஸ்கரன்
மேலே உயரே உச்சியிலே பகுதி 1 & 2
நாக படை
மாயமாய் சிலர்
மாய வானம்
ரங்கா நீதி
அப்பாவின் ஆத்மா
சீதா ரகசியம்
காற்றோடு ஒரு யுத்தம்
நாக வனம் (இன்னும் வெளியிடப்படவில்லை)
அசுர ஜாதகம்
முதல் சக்தி
இரண்டாம் சக்தி
மூன்றாம் சக்தி
நான்காம் சக்தி
ஐந்தாம் சக்தி
ஆறாம் சக்தி
ஏழாம் சக்தி
தொலைக்காட்சித் தொடர்கள்
என் பெயர் ரங்கநாயகி
சிவமயம்
ருத்ர வீணை
விடாது கருப்பு
மர்ம தேசம் - ரகசியம், விடாது கருப்பு (கருப்பு எப்போதும் மறக்க மாட்டேன்), சொர்ண ரேகை (கோல்டன் பாம் லைன்ஸ்), இயந்திர பார்வை, வானத்து மனிதர்கள்