மர்மதேசம் என்பது தமிழ் தொலைக்காட்சிகளில் வெளியான தொடராகும்.[2] I இதனை இயக்குநர் நாகா மற்றும் சி. ஜெ. பாஸ்கர் இயக்கியிருந்தனர். இத்தொடருக்கு இந்திரா சௌந்தரராஜன் கதை எழுதியிருந்தார். இந்த தொலைக்காட்சி தொடர் 1995 லிருந்து 1998 வரை சன் தொலைக்காட்சியில் இரவு 08:30 ஒளிப்பரப்பானது. பின்பு ராஜ் தொலைக்காட்சி 1998லிருந்து 2001 வரை ஒளிபரப்பியது. தற்போது இத்தொடரை வசந்த் தொலைக்காட்சி 3 ஆகஸ்ட் 2015 லிருந்து ஒளிப்பரப்பு செய்தது. அதனை தொடந்து மீண்டும் சன் தொலைக்காட்சியில் 2020 ஆண்டு ஜூலை 27 ஆம் தேதியிலிருந்து ஓளிபரப்பட்டது.[3][4]
மர்மதேசத்தின் முதல் தொடரான “ரகசியம்” இந்தியில் ஸ்டார் பாரத் தொலைக்காட்சியில் கால பைரவ் ரகசியம் என்ற பெயரில் கதைக்களத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் மறு ஆக்கம் ஒளிபரப்பப்பட்டது.[6]
கதை
மீயியற்கை நிகழ்வுகளால் நடப்பதாக நம்பிக்கொண்டிருக்கும் மக்களுக்கு, அதன் மர்மத்தினை உடைத்து சொல்லுகின்ற வகையில் திரைகதை அமைக்கப்பட்டிருந்து.
ரகசியம் - இத்தொடரில் நவபாசான லிங்கத்தினைப் பற்றிய கதையினை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டது..
விடாது கருப்பு - கருப்புசாமி எனும் நாட்டார் தெய்வத்தினைப் பற்றிய கதையினை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டது.
சொர்ண ரேகை - கைரேகை சாத்திரத்தினைப் பற்றிய கதையினை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டது.
இயந்திர பறவை - வர்மக்கலைப் பற்றிய கதையினை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டது.
எதுவும் நடக்கும் - கற்பக விருட்சம் எனும் தேவலோகத்து மரத்தினைப் பற்றிய கதையினை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டது.