இந்துக் கல்லூரி தொடருந்து நிலையம்
பெயர்க்காரணம்சென்னை புறநகர் இரயில் நிலையத்திலிருந்து 24 கி.மீ தொலைவில் இத்தொடருந்து நிலையம் அமைந்துள்ளது. இது பட்டாபிராம் நகர வாழ் மக்களின் பயன்பாட்டிற்கு உதவுகிறது . இந்துக் கல்லூரிக்கு மிக அருகில் இந்த தொடருந்து நிலையம் உள்ளதால் இப்பெயர்ப்பெற்றது. வரலாறு1979 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் தேதி சென்னை மத்திய தொடருந்து நிலையம்-திருவள்ளூர் பிரிவின் மின்மயமாக்கலுடன் இந்நிலையத்திலுள்ள பாதைகள் மின்மயமாக்கப்பட்டன[1] பயன்கள்ஒவ்வொரு நாளும், சுமார் 4,000 மாணவர்கள், 5,000 அலுவலக பணியாளர்கள் மற்றும் 2,000 பிற பயணிகள் உட்பட சுமார் 11,000 பயணிகள் நிலையத்தைப் பயன்படுத்துகின்றனர். நடைமேம்பாலம் இல்லாததால், இந்துக் கல்லூரியில் இருந்து இரயில் தண்டவாளத்தை கடந்து, இரயில் நிலையத்தில் உள்ள புறநகர் நடைமேடைக்கு பயணிகள் செல்கின்றனர். ஆனால், கடந்த 2005 ஆம் ஆண்டு நடைமேம்பாலம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டு, 2008 ஆம் ஆண்டில் பாலம் கட்டப்பட்டது. மேம்பாலமானது பிரதான பாதையை விட்டு வெளியேறும் இரண்டு புறநகர் நடைமேடைகளை மட்டும் இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்டதால் பயணிகள் இரயில் பாதையை கடந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.[2] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia