இந்தோனேசிய இந்தியர்கள்

இந்தோனேசிய இந்தியர்கள்
Indian Indonesians
Orang India Indonesia
மேடான் மாரியம்மன் கோயிலில் இந்தோனேசிய தமிழர்கள் (1993)
மொத்த மக்கள்தொகை
120,000 (2010)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
அதிக அளவு: வடக்கு சுமாத்திரா மற்றும் மேடான்
சுராபாயா · பண்டா அச்சே · ஜகார்த்தா
மொழி(கள்)
முக்கியம்: இந்தோனேசியன் · தமிழ் சிந்தி · பெங்காலி · பஞ்சாபி · குஜராத்தி
சமயங்கள்
அதிக அளவு: இந்து சமயம்
குறைந்த அளவு: இசுலாம் · சீக்கியம் · பௌத்தம் · சைனம் · கத்தோலிக்க திருச்சபை · சீர்திருத்தத் திருச்சபை
தொடர்புள்ள இனக்குழுக்கள்
இந்திய வம்சாவளி மக்கள், மலேசிய இந்தியர்

இந்தோனேசிய இந்தியர்கள் (ஆங்கிலம்: Indian Indonesians; இந்தோனேசியம்: Orang India Indonesia) என்பவர்கள் இந்தோனேசியாவில் வாழ்ந்துவரும் ஒரு குழுவினர் ஆவார்கள்; மற்றும் அவர்களின் முன்னோர்கள் இந்திய துணைக் கண்டத்தில் இருந்து வந்தவர்கள் என்பதால் அவ்வாறு அழைக்கப் படுகின்றனர். இந்தோனேசிய இந்தியர்கள் மட்டுமல்லாது; இந்தோனேசியாவில் வாழும் பாக்கிஸ்தானியர்களும் இந்தோனேசிய இந்தியர்கள் என்றே அழைக்கப் படுகின்றனர்.[1]

சனவரி 2012 இந்திய வெளியுறவு அமைச்சின் கணக்கின்படி, வெளிநாடு வாழ் இந்தியர்கள் பட்டியலில் பதிவு செய்யப்பட்ட 120,000 இந்தியர்களில்; இந்தோனேசியாவில் மட்டும் 9,000 இந்தியர்கள் உள்ளனர்.[2] அவர்களில் பெரும்பான்மையினர் வடக்கு சுமத்ரா மற்றும் பண்டா அச்சே, சுராபாயா , மேடான் மற்றும் ஜகார்த்தா போன்ற நகரங்களில் அதிகமாக வசிக்கின்றனர்.[3]

இருப்பினும், இந்தோனேசிய இந்திய மக்களின் சரியான புள்ளிவிவரங்களைப் பெற இயலவில்லை. ஏனென்றால் அவர்களில் பெரும்பான்மையானோர் உள்ளூர் இந்தோனேசியர்களிடமிருந்து பிரித்து அறிய முடியாதவர்களாக மாறியுள்ளனர்.[4]

பொது

இந்தோனேசியா, ஜகார்த்தாவின் பசார் பாருவில் உள்ள ஒரு பழைய இந்தியப் பகுதி
1920-களில் சுமாத்திராவில் இருந்த ஓர் இந்திய குடும்பத்தின் உருவப்படம்

இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து பல்வேறு மக்கள் வரலாற்று காலத்திற்குப் பின்னர் இந்தோனேசிய தீவுப் பகுதிக்கு அடிக்கடி சென்றனர். உதாரணமாக பாலி நகரில் முதலாம் நூற்றாண்டுகளின் உபயோகப்படுத்தப்பட்ட மட்பாண்டங்கள் மீட்கப்பட்டுள்ளன.

உண்மையில், இந்தோனேசியா என்ற பெயர் இலத்தீன் சிந்து (இந்தியா) மற்றும் கிரேக்க நெசோஸ் (தீவு) என்பதிலிருந்து வருகிறது. இது இந்திய தீவுப்பகுதி என்று பொருள்படும்.

வரலாறு

4--ஆம் மற்றும் 5-ஆம் நூற்றாண்டுகளில் இருந்து, இந்திய கலாசார தாக்கங்கள் இங்கு இன்னும் அதிகமாக காணப்பட்டன. பரம்பரிய தமிழ் மொழி அங்குள்ள கல்வெட்டுகளில் பயன்படுத்தப்பட்டது. இருப்பினும், 7 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர், இந்திய மொழிகளில், உள்ளூர் மொழிகளே அடிக்கடி பயன்படுத்தப்பட்டது. இது ஏற்கனவே பிரகிருதம் மற்றும் தமிழ் மொழியிலிருந்த பல சொற்களைக் கொண்டிருந்தது. அதோடு மட்டுமல்லாமல், சுதேச இந்தோனேசியர்கள் இந்து சமயத்தையும் புத்த மதத்தையும் தழுவினர் .

பல இந்திய மக்கள் இந்தோனேசியாவில் குடியேறி உள்ளூர் மக்களுடன் இணைந்து இயங்கினர். 9 ஆம் நூற்றாண்டில் மத்திய ஜாவாவின் கிடைத்த ஒரு ஒரு கல்வெட்டில், பல்வேறு இந்திய மக்களின் (மற்றும் தென்கிழக்கு ஆசிய மக்கள்) பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. பின்னர், இஸ்லாமியம் எழுச்சி கொண்டு, இந்த மதம் 11 ஆம் நூற்றாண்டில் அரேபியர்கள் மூலம் இந்தோனேசியாவிற்கு கொண்டுவரப்பட்டது.

மேடான் ஸ்ரீ மாரியம்மன் கோயில்

வடக்கு சுமாத்திரா, மேடான், மாரியம்மன் கோயில்

மேடான் , வடக்கு சுமாத்திரா போன்ற இடங்களில் இன்றும் இந்தியாவில் இருந்து மக்கள் குடியேறுகின்றனர். 75,000 மக்களைக் கொண்ட, ஒரு பெரிய (தமிழ் மக்கள்) சமூகம் இருக்கலாம் என மதிப்பிட்டுள்ளது. இந்தோனேசியாவில், பல்வேறு வட இந்தியர்களும் காணப் படுகின்றனர். பொதுவாக அவர்களின் தொழில்கள் ஜவுளி தொழில்களுடன் இணைந்துள்ளன. இந்தோனேசிய சீனர்களைப் போலவே இந்தோனேசிய இந்தியர்கள் பலர், கடை உரிமையாளர்களாக உள்ளனர்.

அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் இல்லாத போதிலும், கிட்டத்தட்ட 25,000 வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இந்தோனேசியாவில் வாழ்ந்து வருகின்றனர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பிடத்தக்க இந்தோனேசிய இந்தியர்களின் பட்டியல்

தமிழ் ஆங்கிலம் குறிப்புகள்
ஆயு அசாரி (Ayu Azhari) இந்தோனேசிய நடிகை.
சார்லஸ் தம்பு (Charles Tambu) இந்தோனேசிய அரசியல்வாதி.
சாந்த் பர்வேஸ் செர்வியா Chand Parwez Servia திரைப்படத் தயாரிப்பாளர்; தொழிலதிபர்.
தாமூ பஞ்சாபி Dhamoo Punjabi சினிமா, திரைப்பட தயாரிப்பாளர்; ஊடக தொழில் அதிபர், நிறுவனர்.
குமாரசாமி துரைச்சாமி (D. Kumaraswamy) இந்தோனேசிய இந்து சீர்திருத்தவாதி; இந்தோனேசியாவில் தமிழ் சமூகத் தலைவர்.
பாரூக் அபெரோ (Farouk Afero) இந்தோனேசிய திரைப்பட நடிகர்
பியாஸ் செர்வியா Fiaz Servia திரைப்படத் தயாரிப்பாளர்
குர்ணம் சிங் (Gurnam Singh) இந்தோனேசிய தடகள வீரர், 1962 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தடகள பிரிவில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றார்.
அர்பரிந்தர்ஜித் சிங் தில்லோன் (Harbrinderjit Singh Dillon) இந்தோனேசிய அரசியல்வாதி.
கிமி ஜெயந்தி (Kimmy Jayanti) இந்தோனேசிய மாடல் மற்றும் நடிகை.
கோபாலன் ஏ.எஸ் Kobalen A.S இந்தோனேசிய அரசியல்வாதி
மனோஜ் பஞ்சாபி (Manoj Punjabi) இந்தோனேசிய சினிமா; ஊடக அதிபர்; எம்.டி. பிக்சர்ஸ்; எம்.டி. என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனங்களின் நிறுவனர்.
மூசா ராஜேக்சா (Musa Rajekshah) இந்தோனேசிய தொழில்முனைவோர்; அரசியல்வாதி
நடராஜா ராமகிருஷ்ணா (Nataraja Ramakrishna) இந்தோனேசிய நடன குரு
நுருதீன் அர்-ராணிரி (en:Nuruddin ar-Raniri) அச்சே சுல்தானகம் அரசியல்வாதி
ராம் பஞ்சாபி (Raam Punjabi) இந்தோனேசிய சினிமா ஊடக அதிபர்; மல்டிவிஷன் பிளஸ் தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனர்
ராம் சோராயா (Ram Soraya) இந்தோனேசிய தொழில்முனைவோர், திரைப்பட தயாரிப்பாளர்; தயாரிப்பு நிறுவனமான சோராயா இன்டர்சின் பிலிம்ஸ் உரிமையாளர்.
ராக்கி சோராயா Rocky Soraya திரைப்பட தயாரிப்பாளர்; ஊடக தொழிலதிபர், இட்மேக்கர் நிறுவனர்; சோரயா இன்டர்சின் பிலிம்ஸின் தற்போதைய தலைவர்.
சாரா அசாரி (Sarah Azhari) இந்தோனேசிய நடிகை, மாடல் மற்றும் பாடகி.
செரி பிரகாஷ் லோகியா (Sri Prakash Lohia) இந்தோனேசிய கோடீஸ்வர தொழிலதிபர்.
சுவாமி ஆனந்த் கிருசுணா (wami Anand Krishna) இந்தோனேசிய ஆன்மீக மனிதநேயவாதி.
தமிழ் செல்வன் Tamil Slevan அரசியல் பார்வையாளர் மற்றும் வர்ணனையாளர்.
விஜய் (Wijay) இந்தோனேசிய கால்பந்து வீரர்.

மேற்கோள்கள்

  1. Sandhu, K. S.; Mani, A. (18 December 1993). Indian Communities in Southeast Asia (First Reprint 2006). Institute of Southeast Asian Studies. ISBN 9789812304186. Retrieved 18 December 2017 – via Google Books.
  2. "Sorry for the inconvenience". Retrieved 18 December 2017.
  3. Aris Ananta, Evi Nurvidya Arifin, M Sairi Hasbullah, Nur Budi Handayani, Agus Pramono. Demography of Indonesia's Ethnicity. Singapore: ISEAS: Institute of Southeast Asian Studies, 2015. p. 273.
  4. Indian Communities in Southeast Asia. Retrieved August 10, 2015.

மேலும் காண்க

மேலும் படிக்க

  • Willmott, Donald Earl. The Chinese of Semarang: A Changing Minority in Indonesia, Ithaca (Cornell University Press), 1960.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya