இனயத்துல்லா கான் மஷ்ரிகி
இனயத்துல்லா கான் மஷ்ரிகி (Inayatullah Khan Mashriqi) ( ஆகத்து 1888 – 27 ஆகத்து 1963), அல்லாமா மஷ்ரிகி எனவும் அறியப்பட்ட இவர் இவர் ஓர் பிரித்தானிய இந்தியராவார். பின்னர் பாக்கித்தானின் கணிதவியலாளரும், தர்க்கவாதியும், அரசியல் கோட்பாட்டாளரும், இசுலாமிய அறிஞரும்,கக்சர் இயக்கத்தின் நிறுவனருமானார். [1] 1930 ஆம் ஆண்டில், இவர் கக்சர் இயக்கத்தை நிறுவினார். எந்தவொரு நம்பிக்கை, பிரிவு அல்லது மதம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் மக்களின் நிலையை முன்னேற்றுவதை நோக்கமாகக் கொண்டார். [3] ஆரம்ப ஆண்டுகளில்பின்னணிஇவர், 1888 ஆகத்து 25 ஆம் தேதி அமிருதசரசில் ஒரு இராஜபுத்திரக் குடும்பத்தில் பிறந்தார். [4] இவரது தந்தை கான் அடா முகாம்மது கான் ஒரு படித்த செல்வந்தர், அமிர்தசரசில் வக்கீல் என்ற இரு வார வெளியீட்டை வைத்திருந்தார். இவரது முன்னோர்கள் முகலாயப் பேரரசு, சீக்கிய பேரரசுகளின் போது உயர் அரசு பதவிகளை வகித்திருந்தனர். இவரது தந்தையின் நிலைப்பாட்டின் காரணமாக, ஜமால் அல்-டான் அல்-ஆப்கானி, சர் சையத் அகமத் கான், ஒரு இளைஞனாக சிப்லி நோமானி உள்ளிட்ட பல பிரபலமான வெளிச்சங்களுடன் இவர் தொடர்பு கொண்டிருந்தார். கல்விஅமிர்தசரசு பள்ளிகளில் சேருவதற்கு முன்பு இவர் ஆரம்பத்தில் வீட்டிலேயே கல்வி கற்றார். [5] சிறுவயதிலிருந்தே கணிதத்தில் ஆர்வம் காட்டினார். [3] லாகூரிலுள்ள போர்மன் கிறித்துவக் கல்லூரியில் முதல் வகுப்பு கௌரவங்களுடன் தனது இளங்கலை பட்டப்படிப்பை முடித்த பின்னர் , பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் முதுகலை பட்டத்தையும் முடித்தார். பல்கலைக்கழக வரலாற்றில் முதல் முறையாக முதல் வகுப்பு எடுத்தார். [6] 1907 ஆம் ஆண்டில் இவர் இங்கிலாந்து சென்று, கேம்பிரிட்சு, கிறிஸ்ட் கல்லூரியில் கணித டிரிபோக்களைப் படித்தார். மே 1908 இல் இவருக்கு கல்லூரி அறக்கட்டளை உதவித்தொகை வழங்கப்பட்டது. [7] சூன் 1909 இல், கணிதம் பகுதி I இல் இவருக்கு முதல் வகுப்பு கௌரவங்கள் வழங்கப்பட்டன. [8] அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு, இவர் இயற்கை அறிவியல் முக்கோணங்களுக்கு இணையாக கிழகத்திய மொழிகள் டிரிபோக்களைப் படித்தார். முந்தையவற்றில் முதல் வகுப்பு கௌரவங்களையும், பிந்தையவற்றில் மூன்றாம் வகுப்பையும் பெற்றார். [9] [10] கேம்பிரிட்ஜில் மூன்று ஆண்டுகள் வசித்த பின்னர் இவர் இளங்கலை கலை பட்டத்திற்கு 1910இல் தகுதி பெற்றார். 1912 ஆம் ஆண்டில் இவர் இயந்திர அறிவியலில் நான்காவது டிரிபோசை முடித்தார். மேலும் இரண்டாம் வகுப்பில் இடம் பெற்றார். அந்த நேரத்தில் இவர் நான்கு வெவ்வேறு திரிபோசில் கௌரவங்களைப் பெற்ற முதல் மனிதர் என்று நம்பப்பட்டது. மேலும் இது குறித்து இங்கிலாந்து முழுவதும் தேசிய செய்தித்தாள்களில் பாராட்டப்பட்டது. [11] அடுத்த ஆண்டு, இவருக்கு கணிதத்தில் தங்கப் பதக்கத்துடன் முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. [12] பின்னர், கேம்பிரிட்சை விட்டு வெளியேறி 1912 திசம்பரில் இந்தியா திரும்பினார். கேம்பிரிச்சில் இவர் தங்கியிருந்த காலத்தில் இவரது மத மற்றும் விஞ்ஞான நம்பிக்கை பேராசிரியர் சர் ஜேம்சு ஆப்வுட் ஜீன்சின் படைப்புகளலும், கருத்துகளாலும் ஈர்க்கப்பட்டது..[1] ஆரம்ப கால வாழ்க்கைஇந்தியா திரும்பியதும், இவர் அல்வார் சுதேச அரசின் பிரதமராக சேர்ந்தார். ஆனால் இவருக்கு கல்வியில் ஆர்வம் இருந்ததால் அப்பதவியை மறுத்துவிட்டார். 25 வயதில், இந்தியா வந்து சில இசுலாமியா கல்லூரியின் துணை முதல்வராக தலைமை ஆணையர் சர் ஜார்ஜ் ரூஸ்-கெப்பல் என்பவரால் நியமிக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அதே கல்லூரியின் முதல்வராக ஆனார். அக்டோபர் 1917 இல் சர் ஜார்ஜ் ஆண்டர்சனுக்கு அடுத்தபடியாக கல்வித்துறையில் இந்திய அரசின் செயலாளராக நியமிக்கப்பட்டார். [13] 21 அக்டோபர் 1919 இல் பெசாவர் உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியரானார். 1920 ஆம் ஆண்டில், பிரித்தானிய அரசாங்கத்தால் இவருக்கு ஆப்கானிஸ்தானின் தூதர் பதவியை வழங்கப்பட்டது. ஒரு வருடம் கழித்து இவர் வீரத்திருத்தகை கௌரவம் வழங்கப்பட்டது. இருப்பினும், இவர் இரண்டையும் மறுத்துவிட்டார். [14] 1930 ஆம் ஆண்டில், இவர் அரசாங்க சேவையில் பதவி உயர்வில் அனுப்பப்பட்டார். அதைத் தொடர்ந்து இவர் மருத்துவ விடுப்பில் சென்றார். 1932 ஆம் ஆண்டில் இவர் தனது பணியினை விட்டு வெளியேறினார். கடைசியாக லாகூரின் இக்ராவில் குடியேறினார். [15] நோபல் பரிந்துரை1924 ஆம் ஆண்டில், தனது 36 வயதில், இவர், விஞ்ஞானத்தின் வெளிச்சத்தில் திருக்குர்ஆனைப் பற்றிய வர்ணனையான தஸ்கிரா என்ற தனது நூலின் தொகுதியை நிறைவு செய்தார் . இது 1925 ஆம் ஆண்டில் நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டது [16]. இது ஐரோப்பிய மொழிகளில் ஒன்றில் மொழிபெயர்க்கப்பட வேண்டுமென்ற நிபந்தனைக்கு உட்பட்டது. இருப்பினும், மொழிபெயர்ப்பின் ஆலோசனையை இவர் மறுத்துவிட்டார். [2] சிறைவாசங்களும் குற்றச்சாட்டுகளும்சூலை 20, 1943 இல், கக்சர் அமைப்பைச் சேர்ந்தவர் என்று கருதப்பட்ட இரபீக் சபீரால் முகம்மது அலி ஜின்னா மீது ஒரு கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. [17] இந்தத் தாக்குதலை மறுத்து வன்மையாக கண்டித்தார். பின்னர், நவம்பர் 4, 1943 அன்று மும்பை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி பிளாக்டன் தனது தீர்ப்பில் தாக்குதலுக்கும் கக்சர்களுக்கும் இடையிலான எந்தவொரு தொடர்புமில்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தார். [18] பாக்கித்தானில், இவர் குறைந்தது நான்கு முறை சிறையில் அடைக்கப்பட்டார்: 1958 இல் குடியரசுத் தலைவர் கான் அப்துல் ஜபார் கான் (டாக்டர் கான் சாகிப் என்று பிரபலமாக அறியப்பட்டவர்) கொலைக்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார். 1962 ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவர் அயூப்பின் அரசாங்கத்தை கவிழ்க்க முயன்ற சந்தேகத்திற்காக குற்றம் சாட்டப்பட்டார். இருப்பினும், குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை. மேலும் அனைத்து வழக்கிலும் இவர் விடுவிக்கப்பட்டார். 1957 ஆம் ஆண்டில், இவர் தனது 300,000 பின்தொடர்பவர்களை காஷ்மீரின் எல்லைகளுக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. அதன் விடுதலைக்கான போராட்டத்தைத் தொடங்க வேண்டும் என்று கூறினார். இருப்பினும், பாக்கித்தான் அரசாங்கம் குழுவை திரும்பப் பெற தூண்டியதுடன், பின்னர் அந்த அமைப்பு கலைக்கப்பட்டது. [19] இறப்புபுற்றுநோயுடன் சிறுது காலம் போராடிய இவர் 1963 ஆகத்து 27 அன்று லாகூரில் உள்ள மயோ மருத்துவமனையில் இறந்தார். [20] மேலும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia