இபாதி இசுலாம்
இபாதி இயக்கம் (Ibadi movement), இபாதியம் (Ibadism) அல்லது இபாதிய்யா (Ibāḍiyya; அரபி: الإباضية) என்பது ஓமானில் பெருமளவு பின்பற்றப்படும் இசுலாமிய மார்க்கம் ஆகும்.[1][2] இப்பிரிவினர் குரானை மட்டும் பின்பற்றுபவர்கள். ஆனால் முகமது நபியின் அறிவுரை நூல்களைப் பின்பற்றுவதில்லை. இவ்வியக்கம் அல்சீரியா, தூனிசியா, லிபியா, கிழக்கு ஆபிரிக்கா ஆகியவற்றின் சில இடங்களிலும் பின்பற்றப்படுகிறது. இந்த இயக்கம் கிபி 650-ல் அல்லது இசுலாமியத் தீர்க்கதரிசி முகம்மது இறந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு, சுன்னி, சியா ஆகிய இரு பிரிவுகளுக்கும் முன்னதாக நிறுவப்பட்டதாகக் கூறப்படுகிறது.[3] தற்கால வரலாற்றாசிரியர்கள் கவாரிச்சு இயக்கத்தின் மிதவாதக் கோட்பாட்டின் வழியே இதன் தோற்றத்தைக் காண்கின்றனர்.[4][5][6]:3 சமகால இபாதிகள் தம்மைக் கவாரிச்சுகள் என வகைப்படுத்தப்படுவதை கடுமையாக எதிர்க்கின்றனர், இருப்பினும் அவர்களின் இயக்கம் கிபி 657 கவாரிச்சுகளின் பிரிவினையிலிருந்து தோன்றியது என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்கின்றனர்.[6]:3 குறிப்பிடத்தக்க இபாதிகள்ஓமான் சுல்தான்கள்மேற்கோள்கள்
இவற்றையும் பார்க்கவும்வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia