இசுலாம் குறித்த விமர்சனங்கள் என்பது இசுலாமிய சமய நம்பிக்கைகள், கொள்கைகள் மற்றும் அச்சமயம் பற்றிய வேறு கருத்துக்கள் பற்றியும் விமர்சிப்பதாக பரவலாக வரையறுக்கப்பட்டுள்ளது. இசுலாம் மீதான விமர்சனம் இசுலாம் ஆரம்பித்த காலந்தொட்டு எழுந்துள்ளது. ஒன்பதாம் நூற்றாண்டுக்கு முன் எழுதப்பட்ட கிறித்தவர்களின் விமர்சனங்கள் பெரும்பான்மையாக இசுலாத்தை தீவிர கிறித்தவ திரிபுக் கொள்கையாகவே கனித்தது. ஆரம்பத்தில் எழுதப்பட்ட மறுப்புகள் கிறிஸ்தவர்கள், யூதர்கள் மற்றும் இபின் அல்-ரவண்டி போன்ற சில முன்னாள் முசுலிம்களிடமிருந்தும் வந்தன.[1] பின்னர் முசுலிம் உலகமே தன்னைத்தானே விமர்சனத்திற்கு உள்ளாக்கியது.[2][3][4] இசுலாம் மீதான மேற்குலக விமர்சனம் செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள் மற்றும் பிற பயங்கரவாத சம்பவங்களுக்குப் பிறகு வளர்ந்தது.[5][6]பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாத சித்தாந்தத்தின் குறிப்பிடத்தக்க ஆதாரமாக இசுலாமிய தேவ வசனங்கள் மற்றும் போதனைகள் இருப்பதாக அவ்விமர்சனம் குறிப்பிட்டது.[7][8] 2014 ஆம் ஆண்டு நிலவரப்படி, உலகின் நான்கில் ஒரு பகுதி நாடுகளும் பிரதேசங்களும் (26%) நிந்தனைக்கு தெய்வ நிந்தைக்கு எதிராகவும் (13%) விசுவாச துரோகத்திற்கு எதிராகவும் சட்டங்கள் அல்லது கொள்கைகளைக் கொண்டிருந்தன.[9] 2017 ஆம் ஆண்டில், முசுலிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட 13 நாடுகள் விசுவாசத் துரோகத்திற்காகவும் தெய்வ நிந்தைக்காகவும் மரண தண்டனை விதிக்கும் சட்டத்தைக் கொண்டிருந்தன.[10]
விமர்சன இலக்குகள் இசுலாத்தின் நிறுவனரான முகம்மது நபியின் வாழ்க்கை நெறிகள், அதாவது அவரின் தனிப்பட்ட மற்றும் பொது வாழ்க்கை ஆகியவற்றை உள்ளடக்கிக் காணப்பட்டது.[4][11]இசுலாத்தின் புனித நூல்களானகுர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் ஆகியனவற்றின் நம்பகத்தன்மை மற்றும் ஒழுக்க நெறி தொடர்பான சிக்கல்கள் விமர்சகர்களால் விவாதிக்கப்படுகின்றன.[12] இசுலாம் அரபு ஏகாதிபத்தியத்தின் ஒரு வடிவமாகவும் பார்க்கப்படுவதுடன் பூர்வீக கலாச்சாரங்களை அழித்ததற்காக ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா போன்ற இடங்களில் இருந்து விமர்சனங்களைப் பெற்றுள்ளது.[13] முசுலிம் வர்த்தகர்கள் 17 மில்லியன் அடிமைகளை இந்தியப் பெருங்கடல் கரைப்பகுதி, மத்திய கிழக்கு மற்றும் வட வடக்கு ஆப்பிரிக்காவின் கரைக்கு ஏற்றுமதி செய்ய வழிவகுத்த, ஒரு முறையாக அங்கீகரித்த இஸ்லாமில் அடிமைத்தனம் விமர்சிக்கப்பட்டது.[14][15][16][17]
மேற்கோள்கள்
↑De Haeresibus by தமாஸ்கஸ் நகர யோவான். See Migne. Patrologia Graeca, vol. 94, 1864, cols 763–73. An English translation by the Reverend John W Voorhis appeared in The Moslem World for October 1954, pp. 392–98.
↑Dror Ze'evi (2009). "Slavery". The Oxford Encyclopedia of the Islamic World. Ed. John L. Esposito. Oxford: Oxford University Press.பரணிடப்பட்டது 2017-02-23 at the வந்தவழி இயந்திரம்
Lockman, Zachary (2004). Contending Visions of the Middle East: The History and Politics of Orientalism. Cambridge University Press. ISBN978-0-521-62937-9.
Lal, K. S. (1994). Muslim slave system in medieval India. New Delhi: Aditya Prakashan.
Westerlund, David (2003). "Ahmed Deedat's Theology of Religion: Apologetics through Polemics". Journal of Religion in Africa33 (3).>
Shourie, A. (2012). The world of fatwas, or, The Shariah in action. New Delhi: HarperCollins Publishers India, a joint venture with The India Today Group.
Swarup, R. (1992). Hindu view of Christianity and Islam. New Delhi: Voice of India.